ஒப்பந்தத்திற்கு முற்றுப்புள்ளி... முன்பாகவே எச்சரித்த மஸ்க்... ட்விட்டர் சிஇஓ-க்கு அனுப்பிய குறுஞ்செய்தி
எலான் மஸ்க் சமீபத்தில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு முன், ஜூன் 28ஆம் தேதி அன்று ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பராக் அகர்வாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார்.
டெஸ்லா தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க், ட்விட்டர் நிறுவனம் ஆகியோருக்கிடையேயான சர்ச்சை பல திருப்பங்களை கடந்து முக்கியமான கட்டத்தை எட்டி உள்ளது.
'Your lawyers are using these conversations to cause trouble. That needs to stop,' Musk's text reportedly read https://t.co/6P4QLi2T5A
— Business Standard (@bsindia) July 17, 2022
எலான் மஸ்க் சமீபத்தில், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு முன், ஜூன் 28ஆம் தேதி அன்று ட்விட்டர் தலைமை நிர்வாக அலுவலர் பாரக் அகர்வாலுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார். நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நிதி விவரங்கள் குறித்த தகவல்களைக் கேட்ட பிறகு சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதாக அந்த குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
"உங்கள் வழக்கறிஞர்கள் இந்த உரையாடல்களைப் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்துகின்றனர். அது நிறுத்தப்பட வேண்டும்," என்று மஸ்க் குறுஞ்செய்தியில் குறிப்பிட்டிருந்தார். ட்விட்டரை வாங்க எவ்வாறு நிதியை புரட்ட போகிறீர்கள் என்று ட்விட்டர் மஸ்க்கிடம் கேட்டதற்குப் பிறகு மஸ்க் இந்த குறிப்பிட்ட செய்தியை அனுப்பி உள்ளார்.
ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக டெஸ்லாவின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். இச்சூழலில், ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் மீது ட்விட்டர் வழக்கு தொடர்ந்து உள்ளது. டெலாவேரின் கோர்ட் ஆஃப் சான்சரியில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாத The Vergeஇல் செய்தி வெளியாகியுள்ளது.
வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து ட்விட்டர் சார்பில், "மஸ்க் ஒப்பந்தத்தை மேலும் மீறாமல் தடுக்கவும், அவரது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவும் ட்விட்டர் இந்தச் செயலை செய்துள்ளது. நிலுவையில் உள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி ஒப்பந்தத்தை முழுமை பெற செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு மஸ்கிற்க விற்க ஒப்பந்தத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதன் மூலம் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு ட்விட்டர் தயாராகி உள்ளது.
உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுலவருமான எலான் மாஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்குவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக எலான் மஸ்க்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார்.
இந்த தகவலை எலான் மஸ்க் தெரிவித்ததும், உலகம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்