Elon Musk and Twitter : ட்விட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா என்று கேட்ட எலன் மஸ்க்; கவனமான வாக்களிக்க சொன்ன டிவிட்டர் சி.இ.ஓ.
எலான் மஸ்ட் டிவீட்டை கோட் செய்து, கவனமாக வாக்களியுங்கள்.
பிரபல நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் (Elon Musk) ட்விட்டர் நிறுவனம் புதிதாக கொண்டுவர உள்ள எடிட் பட்டன் குறித்து ஒரு வாக்கெடுப்பை பதிவாக போஸ்ட் செய்திருந்தார்.
Do you want an edit button?
— Elon Musk (@elonmusk) April 5, 2022
எலான் மஸ்க் தன்னுடைய டிவிட்டர் போஸ்டில், ”உங்களுக்கு டிவிட்டரில் எடிட் பட்டன் வேண்டுமா?” என்ற கேள்வியுடன் ‘yes’ மற்றும் ‘on’ என்பதுடன் பதிவிட்டுள்ளார்.
இதற்கு டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், (Parag Agarwal)
எலான் மஸ்ட் டிவீட்டை கோட் செய்து, கவனமாக வாக்களியுங்கள். இந்த போஸ்ட் ஏற்படுத்தும் விளைவுகள் முக்கியமானவை’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The consequences of this poll will be important. Please vote carefully. https://t.co/UDJIvznALB
— Parag Agrawal (@paraga) April 5, 2022
சமீபத்தில் டிவிட்டர் நிறுவத்தின் 73.5 மில்லியன் மதிப்பிலான (9.2 %) பங்குகளை எலான் மஸ்க் வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளங்களுள் ஒன்று ட்விட்டர். குறுந்தகவல்களை மட்டுமே ஷேர் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டதுதான் ட்விட்டர். பயனாளர்களை தன்வசப்படுத்த ட்விட்டர் அவ்வபோது சில வசதிகளை தனது பயனாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் விரைவில் எடிட் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி ட்விட்டர் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் “நாங்கள் எடிட் பட்டனுக்கான வேலைகளை செய்துக்கொண்டிருக்கிறோம் “ என பதிவிட்டிருந்தது.
we are working on an edit button
— Twitter (@Twitter) April 1, 2022
ஜனவரி 2020 இல், ட்விட்டர் இணை நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜாக் டோர்சி வயர்டிடம் ட்விட்டர் ஒருபோது தனது பயனாளர்களுக்கான எடிட் பட்டனை உருவாக்காது என திட்டவட்டமாக தெரிவித்திருந்தார். அட என்னதான் காரணம்? ஏன் ஒரு எடிட் பட்டனை உருவாக்க இவ்வளவு அடம்பிடிக்கிறீர்கள் என கேட்டதற்கு
..” நீங்கள் பேசும் போது, கூறிய வார்த்தைகளை திருத்த முடியாதல்லவா.. அப்படித்தான் ஒரு உரையை நீங்கள் பதிவிட்ட பிறகும், அதனை திருத்த முடியாது “ என பதிலளித்தது ட்விட்டர் நிர்வாகம் .
டிவிட்டரில் எடிட் வசதி இருந்தால் சரியாக இருக்குமா என்பது குறித்து பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.