மேலும் அறிய

Elon Musk : ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்கிய மஸ்க்...நீண்ட சட்ட போராட்டத்துக்கு ரெடியானது ட்விட்டர்..

ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக டெஸ்லாவின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார்.

ட்விட்டரை 44 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்குவதாக டெஸ்லாவின் தலைமை செயல் அலுவலர் எலான் மஸ்க் ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தார். இச்சூழலில், ஒப்பந்தத்தை மீறியதாக மஸ்க் மீது ட்விட்டர் வழக்கு தொடர்ந்த நிலையில், அதற்கு அவர் எதிர்வினை ஆற்றியுள்ளார்.

எலான் மஸ்கிற்கு எதிராக ட்விட்டர் வழக்கு தொடர்ந்துள்ளதாக இணையத்தில் செய்தி வெளியான நிலையில், இதுகுறித்து ட்விட்டரில் அவர் கருத்து பதிவிட்டுள்ளார். "என்ன ஒரு முரண்" என மஸ்க் ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தாலும், வழக்கு குறித்து அவர் எதுவும் குறிப்பிடவில்லை. இருப்பினும், ட்விட்டர் ஒப்பந்தம் குறித்துதான் அவர் ட்வீட் செய்துள்ளார் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. 

கடந்த ஏப்ரல் மாதம், மஸ்குடன் ஒப்பந்தம் மேற்கொள்ள ட்விட்டர் விருப்பம் கூட தெரிவில்லை. இந்நிலையில், செவ்வாய்கிழமை அன்று டெலாவேரின் கோர்ட் ஆஃப் சான்சரியில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாத The Vergeஇல் செய்தி வெளியாகியுள்ளது.

வழக்கு தொடரப்பட்டிருப்பது குறித்து ட்விட்டர் சார்பில், "மஸ்க் ஒப்பந்தத்தை மேலும் மீறாமல் தடுக்கவும், அவரது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்றும்படி கட்டாயப்படுத்தவும் ட்விட்டர் இந்தச் செயலை செய்துள்ளது. நிலுவையில் உள்ள நிபந்தனைகளை நிறைவேற்றி ஒப்பந்தத்தை முழுமை பெற செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஒரு பங்கை 54.20 அமெரிக்க டாலர்களுக்கு மஸ்கிற்க விற்க ஒப்பந்தத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கு தொடரப்பட்டிருப்பதன் மூலம் நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு ட்விட்டர் தயாராகி உள்ளது. 

உலகின் முன்னனி பணக்காரராரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அலுலவருமான எலான் மாஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் ட்விட்டரை வாங்குவதாக தகவல் வெளியானது. இதனை உறுதிப் படுத்தும் விதமாக எலான் மஸ்க்கும் தனது டிவிட்டர் பக்கத்தில் ட்விட்டரை வாங்குவதாக அறிவித்தார்.

இந்த தகவலை எலான் மஸ்க் தெரிவித்ததும், உலகம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.  இதைத் தொடர்ந்து ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் தயார் செய்யப்பட்டு கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, 44 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.  

தற்போது ட்விட்டர் கணக்குகள் மற்றும் அதன் ஷேர்கள் எலான் மஸ்க்கிற்கு மாற்றப்பட்டு வருகிற பணிகள் நடந்து வருகிறது. இச்சூழலில், ட்விட்டர் நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட எலான் மஸ்க், ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தினை ரத்து செய்வதாக அறிவித்தார்.  

ட்விட்டரில் உள்ள போலி கணக்குகள் மற்றும் தொடர்ந்து செயல்படாமல் இருக்கக்கூடிய கணக்குகள் பற்றிய விபரங்களை, ஒப்படைக்கும் படி மஸ்க் ட்விட்டர் நிர்வாகத்திடம் கேட்டிருந்தார். ஆனால், ட்விட்டர் நிர்வாகம் இது குறித்து எந்த விதமான தகவலையும் வழங்கவில்லை. மேலும் ட்விட்டர் தெரிவித்திருந்ததை விட 4 மடங்கு அதிகமான போலி கணக்குகள் உள்ளதாகவும், இதனால் லாபமற்ற ட்விட்டரை வாங்கி பயனற்றது என எலான் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“இது கூட தெரியாதா விஜய்” கலாய்க்கும் திமுகவினர்திருப்பி அடிக்கும் தவெகவினர்!TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
Kanguva: இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே! ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெற்ற கங்குவா? குஷியில் சூர்யா ரசிகர்கள்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Embed widget