மேலும் அறிய

Earthquake in Turkey: துருக்கியை விடாது துரத்தும் நிலநடுக்கம்.. இன்று 2-வது நாளாக ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவு!

Earthquake in Turkey: துருக்கியில் இன்று 2வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கியில் நேற்று 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு இதுவரை 4,300 மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில் இன்று 2வது நாளாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆக பதிவாகியுள்ளது. 

துருக்கி- சிரியா எல்லையில் காசியான்டெப் மாகாணத்தில் அமைந்துள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் தொலைவில், 24.1 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் 7.8 ஆக பதிவாகியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியை தாக்கிய இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பல கட்டடங்கள் குலுங்கி இடிந்து விழுந்து தரைமட்டமாகின. சிரியாவில் பாதிப்பு சற்றே குறைவாக இருந்தாலும், துருக்கியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குடியிருப்புகள் மட்டுமின்றி, அந்நாட்டில் இருந்த 2,200 ஆண்டுகள் பழமையான காசியண்டெப் கோட்டை உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க கட்டடங்களும் தரைமட்டமாகின.  இந்த நிலநடுக்கத்தின் எதிரொலிது லெபனான் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது. தற்போது வரை இரு நாடுகளிலும் சேர்த்து ஆயிரத்து 4000-க்கும் அதிகமானோர் உயிரிழந்த நிலையில், பல்லாயிரக்கணக்கானோர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மூன்று நிலநடுக்கம்:

காலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பிற்பகலிலும், ரிக்டர் அளவில் 7.6 என்ற அளவிலான மேலும் ஒரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டாவது நிலநடுக்கத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரிக்டர் அளவில் 6.0 என்ற அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இந்நிலையில், நிலநடுக்கதால் துருக்கியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 பேரை எட்டும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. பொருளாதார இழப்புகள் 1 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம், இது துருக்கியின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை இருக்கும் என்றும் அறிக்கை மதிப்பிடுகிறது.

பலி எண்ணிக்கை உயர காரணம் என்ன?

நிலநடுக்கம் ஏற்பட்ட நேரம் அதிகாலை என்பதால் வீடுகளில் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்தபோது நிலநடுக்கம் ஏற்பட்டு கட்டடங்கள் இடிந்து அதன் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். கட்டடங்களில் இருந்து உடனடியாக வெளியேற முடியாததால் பலி எண்ணிக்கை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்தடுத்து தொடர்ந்து 3 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் அதிகமாக இருப்பதால் பலி எண்ணிக்கையும் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட காரணம் என்ன? 

அனடோலியன் தட்டில் அமர்ந்திப்பதால், நிலநடுக்கங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடாக துருக்கி உள்ளது. யூரேசியாவிற்கு எதிராக வடகிழக்கு நகரும் போது இரண்டு பெரிய நாடுகளை எல்லையாகக் கொண்டுள்ள துருக்கியை,  ஒரு பெரிய  நிலநடுக்கம் அழிக்கும் என்று நிபுணர்கள் நீண்ட காலமாக எச்சரித்து வருகின்றனர். ஆனாலும்,  பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை பின்பற்றாமல்,  பரவலான கட்டடங்களை துருக்கி அரசு அனுமதித்துள்ளது.

இதுவரை ஏற்பட்ட மோசமான நிலநடுக்கங்கள்:

கடந்த 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவான நிலநடுக்கம் தான், துருக்கி வரலாற்றிலேயே மிக மோசமான நிலநடுக்கமாக கருதப்படுகிறது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால், 17 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகினர். 2003ஆம் ஆண்டு பிங்கோல் என்ற இடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 170 க்கும் அதிகமானோர் பலியாக,   2011ஆம் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்களில் 600-க்கும் அதிகமானோர்  உயிரிழந்தனர்.  கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஏஜியன் கடற்கரைப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகினர். இந்நிலையில், இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 10 ஆயிரம் பேர் பலியாகலாம் என அமெரிக்கா கணித்துள்ளது. இதன் மூலம், துருக்கியின் இரண்டாவது மோசமான நிலநடுக்கமாக இது பதிவாகலாம். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul gandhi meets labourers : கட்டிட வேலை பார்த்த ராகுல்! உற்சாகமான தொழிலாளர்கள்! உருக்கமான பதிவுTrichy rowdy :  ரவுடியை சுட்டுப்பிடித்த POLICE! அலறவிடும் SP வருண்குமார்! நடந்தது என்ன?Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
Breaking News LIVE, July 6: ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சென்னை வருகிறார் மாயாவதி
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
EPS Annamalai: வாயில் வடை , நம்பிக்கை துரோகி - எடப்பாடி & அண்ணாமலை இடையே வார்த்தை மோதல் - குறுக்கே திமுக
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை! சட்டம் ஒழுங்கை என்ன சொல்வது? இ.பி.எஸ். கண்டனம்
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
UEFA Euro 2024: யூரோ கோப்பை..ஜெர்மனியை வீழ்த்தி அசத்தல்.. அரையிறுதி சுற்றுக்கு ஸ்பெயின் அணி தகுதி!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Sabarimala Temple: பக்தர்களே! ஆடி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 15-ந் தேதி திறப்பு!
Chennai Power Shutdown : சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்.. எங்கு எங்கு தெரியுமா ?
Chennai Power Shutdown : சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் மின் நிறுத்தம்.. எங்கு எங்கு தெரியுமா ?
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
TN Rain: ”இரவு 10 மணிக்குள் 30 மாவட்டங்களில் மழை”: இந்த பகுதி மக்கள் பத்திரமாக வீட்டுக்கு போங்க!
Embed widget