தின்ற பர்க்கருக்கு பணம் தராத டொனால்ட் டிரம்ப்
மெக்டொனால்ட் பர்கர்களை வாங்க அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னிடம் கடனாக பெற்ற 130 அமெரிக்க டாலரை இதுவரை திருப்பித் தரவில்லை என்ற அவரின் மெய்க்காப்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பு டொனால்ட் டிரம்பின் பாதுகாவலராக இருந்தவர் கெவின் மெக்கே. 2008ம் ஆண்டில் ஸ்காட்லாந்து பயணத்தின் போது, டொனால்டு ட்ரம்பிடம் இங்கிலாந்து நாணயம் இல்லை. எனவே, பாதுகாவலர் கெவினிடம் தனக்கும், தனது கூட்டாளிகளுக்கும் `மெக்டொனால்ட்’ பர்கர் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார்.
கெவினும் உலகப் பணக்காரர் ஆசைப்பட்டு கேட்கிறார் என்று தன் கைகாசை செலவு செய்திருக்கிறார். பர்கரை வாங்கி கொண்ட ட்ரம்ப் இதற்கான பணத்தை விரைவில் நான் திருப்பி அளித்துவிடுகிறேன் என வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், ட்ரம்ப் தனது வாக்குறுதியை இன்று வரையில் நிறைவேற்றவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக ஆங்கில ஊடகத்திடம் பேசிய கெவின், "ஆரம்பத்தில் சிறந்த மனிதராகத் தான் நான் ட்ரம்பை பார்த்தேன். ஆனால், போக போக அவரிடம் பணி செய்வது மிகவும் கடினமானதாக இருந்தது. 2012ல் நான் அவரிடம் இருந்து விடைபெற்றேன். சகிப்புத் தன்மை இல்லாதாவர். பர்கர்க்கு செலவிட்ட பணத்தை இன்று வரை தரவில்லை" என்று கூறியுள்ளார்.





















