மேலும் அறிய

Chinese Spy Balloon: சீனாவின் உளவு பலூனை சுட்டு வீழ்த்த முடியாதது ஏன்? நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் அமெரிக்கா..

அமெரிக்காவின் வான் பரப்பில் சுற்றி திரியும் சந்தேகத்திற்கிடமான சீனாவின் பலூன், இன்னும் சில தினங்களுக்கு அந்த பகுதியிலேயே இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுட்டு வீழ்த்த உத்தரவிட்ட அதிபர்:

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் வெள்ளை நிற ராட்சத பலூன் ஒன்று பறந்து வருகிறது. இது சீனாவின் உளவு பலூன் என்றும், மொன்டானா மாகாணத்தில் உள்ள அணு ஆயுத தளத்தை கண்காணிக்க பறந்து வந்ததாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதையடுத்து பாதுகாப்பு நடவடிக்கையின் பேரில், உடனடியாக அந்த பலூனை சுட்டு வீழ்த்த அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்தினால் பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக பெண்டகன் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக தான், இந்த நேரம் வரையில் அந்த பலூன் சுட்டு வீழ்த்தப்படாமல் உள்ளது.

சுட்டு வீழ்த்துவதில் பிரச்னை என்ன?

வானில் பறக்கும் அந்த பலூன் ஆனது சுமார் 3 முழு நீள பேருந்துகளின் அளவிற்கு வடிவத்தில் பெரியது. அதில், அதிக எடையுடன் கூடிய இயந்திரங்களுடன், வழிகாட்டுதல் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கான மின்னணுவியல், பெரிய சோலார் பேனல்களையும் கொண்டுள்ளது. வானில் சுமார் 80 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டுள்ளது. அமெரிக்காவின் கைவசம் உள்ள அதிநவீன போர் விமானங்கள் கூட அதிகபட்சமாக 65 ஆயிரம் அடி உயரத்திற்கு தான் பறக்க முடியும். அதனால் அந்த பலூனை சுட்டு வீழ்த்துவது சாதாரண காரியமல்ல.  அதேநேரம், தற்போதுள்ள ஆயுதங்களை கொண்டு அழிக்கப்படும் அளவிற்கு, எளிதான வடிவமைப்பையும் அது கொண்டிருக்கவில்லை.

சாதாரண பலூனை போன்று ஓட்டை போட முடியாது:

சாதரண பலுனை போன்று ஒரு சிறிய ஓட்டை போட்டு அதில் காற்றை எடுத்துவிட்டால், பலூன் தானாக கீழே இறங்கி விடுமே என நினைக்கலாம். ஆனால், அந்த பலூன் செய்யப்பட்டுள்ள பொருளின் தடிமனானது ஒரு சாண்ட்வெஜ் அளவிலான தடிமனான பிளாஸ்டிக் பொருளை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.  ஒரு வேளை அதிநவீன ஆயுதங்களை கொண்டு, அந்த பலூனை அமெரிக்கா  சுட்டு வீழ்த்தினாலும், அதிலுள்ள அதிக எடையிலான பொருட்கள் கீழே விழுந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படலாம் என்பதால், அமெரிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. அதோடு, தற்போது நிலவும் சூழல்படி மேலும் சில நாட்களுக்கு, சீனாவின் அந்த பலூன் அமெரிக்க வான் பரப்பில் இருக்கும் எனவும் அராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனா விளக்கம்:

அமெரிக்க வான்பரப்புக்குள் பறந்தது உளவு பலூன் அல்ல என்றும், அது வானிலை ஆராய்ச்சிக்காக பறக்க விடப்பட்ட ஆகாய கப்பல் என்றும் சீனா விளக்கம் அளித்துள்ளது. அதில், மேற்கில் இருந்து வீசிய காற்று மற்றும் குறைவான சுய இயங்கு தன்மையால், ஆகாய கப்பல் திசை மாறி சென்று விட்டது. அது அமெரிக்க வான் பரப்புக்குள் தவறுதலாக நுழைந்ததற்காக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா கண்டனம்:

”சீன அரசின் விளக்கம் பற்றி கேள்விபட்டோம். ஆனால் உண்மை என்னவென்றால் அது ஒரு உளவு பலூன் என்பது எங்களுக்கு தெரியும். அது அமெரிக்க வான்வெளி மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளது. இதை ஏற்றுக் கொள்ள முடியாது” என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Moorthy: ” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
” இது ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்” சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தி பேச்சு
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
சாகசத்திற்கு தயாரா? குடியரசு தின அணிவகுப்பை நேரில் பார்க்கனுமா? உடனே புக் பண்ணுங்க!
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
அடங்கி போன அண்ணாமலை; அமித்ஷா போட்ட ஆர்டர்..டெல்லியில் நடந்தது என்ன?
"விவசாயிகளின் நலனே முக்கியம்.." உறுதிபட கூறிய பிரதமர் மோடி!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!
Embed widget