மேலும் அறிய

மைக்ரோசாப்ட் முடக்கத்தால் பாதிக்கப்படாத ஒரே நாடு.. தனியாக மாஸ் காட்டிய சீனா.. எப்படி?

மைக்ரோசாப்ட் செயலிழப்பால் உலக நாடுகளே திணறிய நிலையில், சீனாவில் மட்டும் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. அதற்கு காரணம் என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.

மைக்ரோசாப்ட் முடக்கத்தால் உலக நாடுகள் முழுவதும் திணறியது. விமான போக்குவரத்து முதல் ஒளிபரப்பு வரை, அனைத்து துறைகளும் ஸ்தம்பித்தன. ஆனால், இந்த மைக்ரோசாப்ட் செயலிழப்பால் சீனா பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்படாத சீனா: தொழில்நுட்ப கோளாறால் உலக நாடுகள் முடங்கிய போதிலும், சீன நாட்டின் விமான சேவையும் வங்கி சேவையும் பாதிக்கப்படவில்லை என சவுத் சைனா போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. தினசரி பணிகளுக்காக அந்த நாடு வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திராமல் இருந்ததே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது.

இருப்பினும், சீனாவில் உள்ள ஷாங்காயில் வெளிநாட்டு நிறுவனத்திற்காக பணிபுரிந்து வரும் பெண், இதுகுறித்து கூறுகையில், "மானிட்டரில் ப்ளூ ஸ்கிரீன் மட்டுமே தெரிவதாக எனது அலுவலகத்தில் உள்ளவர்கள் புகார் செய்தனர். விண்டோஸ் சரியாக லோட் ஆகவில்லை என திரையில் குறிப்பிடப்பட்டிருந்தது" என்றார்.

இணையத்தில் சில சர்வதேச ஹோட்டல்களை தேடும்போது சிக்கல்களை எதிர்கொண்டதாக சீனாவில் உள்ள மக்கள் சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்திருந்தனர். Xiaohongshu என்ற சீன சமூக வலைதளத்தில் தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக மக்கள் புகார் கூறியிருந்தனர்.

மைக்ரோசாப்ட் முடக்கத்திற்கு காரணம் என்ன? மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முக்கியமான மென்பொருள்களில் ஒன்று கிளவுட். சாப்ட்வேர் மற்றும் விமான சேவை துறைகளில் கிளவுடின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது.

இந்த சூழலில், கிரவுட் ஸ்ட்ரைக் (CrowdStrike) காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியுள்ளது. கிரவுட் ஸ்ட்ரைக் என்பது இணைய பாதுகாப்பு நிறுவனமாகும். விண்டோஸ் நிறுவனத்துடன் இணைந்து மேம்பட்ட பாதுகாப்பை வழங்குகிறது.

எப்போது எல்லாம் பிரச்னைகள் ஏற்படுகிறதோ அப்போது எல்லாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) மற்றும் மெஷின் லேர்னிங் மூலம் உடனடியாக அதற்கு தீர்வு காண்கிறது கிரவுட் ஸ்ட்ரைக். இப்படியிருக்க, கிரவுட் ஸ்ட்ரைக் அப்டேட் காரணமாக மைக்ரோசாப்ட் கணினி முடங்கியது.

இதன் தாக்கம் உலகம் முழுவதும் பல நாடுகளில் எதிரொலித்தது. அந்த வகையில், இந்தியாவில் கணினி முடக்கம் காரணமாக 192 விமானங்களை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்தது. அதோடு, விமானங்களை புக் செய்ய முடியாமலும், ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு ரீபண்ட் பெற முடியாமலும் பயணிகள் தவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vellore Ibrahim Arrest : திருப்பரங்குன்றம் சர்ச்சைவேலூர் இப்ராஹிம் கைது!பரபரக்கும் மதுரைMadurai Accident CCTV : மின்கம்பத்தில் மோதிய ஆட்டோதுடிதுடிக்க பிரிந்த உயிர்..பகீர் சிசிடிவி காட்சிகள்Accident News | குறுக்கே ஓடிய குதிரை வரிசையாக மோதிய வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூரில் அதிர்ச்சி! | ChennaiSrirangam Murder | ஸ்ரீரங்கத்தில் கொடூர கொலைதுடி துடிக்க வெறிச்செயல் பதைபதைக்க வைக்கும் காட்சி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
New Case on Seeman: வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
வழக்கு வேட்டை நடத்தும் சீமான்... இப்படியா தொடர்ந்து கேஸ் வாங்குறது.?
Gold Rate: ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ஆத்தாடி... கண்ண கட்டுதே...புதிய உச்சத்தை தொடும் தங்கம் விலை...
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
ம.பி. முதலமைச்சரின் செயலாளர் ஆன ஈரோட்டுக்காரர்; யார் இந்த சிபி சக்கரவர்த்தி?
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
“வெடிகுண்டு வச்சிருக்கேன்; தூக்கி வீசுனா என்ன ஆவீங்க” – ஐயா பிரகாஷ்ராஜ் பாணியில் மிரட்டல் விடுக்கும் சீமான்!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
எச்சரிக்கை! டிஜிட்டல் கைது! ஆசிரியையிடம் ரூ.5.50 கோடி அபேஸ்! – மக்களே ஏமாறாதீங்க!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
காலையிலேயே சோகம்! மௌனி அமாவாசை! கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பக்தர்கள் பலி!
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
பூம்புகார் மற்றும் காவிரி துலா கட்டத்தில் அமாவாசை வழிபாட்டுக்காக திரண்ட பொதுமக்கள்.
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் 100வது ராக்கெட்! என்ன ஸ்பெஷல்!
Embed widget