Argentina: சம்பளத்துக்கு இறுதிச்சடங்கு.. அர்ஜெண்டினா தொழிலாளர்கள் செலுத்திய அஞ்சலி.. காரணம் என்ன?
இந்த இறுதிச் சடங்கில் பிரம்மாண்ட சவப்பெட்டியுடன் கறுப்பு ஆடை தரித்தும் மலர் வளையங்கள் எடுத்து வந்தும் தொழிலாளர்கள் சம்பளத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்
அர்ஜெண்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் தொழிலாளர்கள் சம்பளம் உயிரிழந்ததாகக் கருதி அதற்கு இறுதிச் சடங்கு செய்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பிரம்மாண்ட இறுதி அஞ்சலி
அர்ஜெண்டினா நாட்டில் பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டியுள்ள நிலையில், அந்நாட்டு தொழிலாளர் சமூகத்தினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் பண வீக்கம் 90 விழுக்காட்டை எட்டும் என நம்பப்படுகிறது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த பல ஆண்டுகளாக அந்நாட்டு அரசு முயற்சித்து வரும் நிலையில், தொழிலாளர்களின் வாங்கும் சக்தியும் பெருமளவு இதனால் பாதிக்கப்பட்டுள்ளது.
'The paycheck has died': Argentine workers hold funeral for wages https://t.co/VB5xe7TL6a pic.twitter.com/SVwJS01uAs
— Reuters (@Reuters) August 20, 2022
இந்நிலையில், இந்த இறுதிச் சடங்கில் பிரம்மாண்ட சவப்பெட்டியுடன் கறுப்பு ஆடை தரித்தும் மலர் வளையங்கள் எடுத்து வந்தும் தொழிலாளர்கள் சம்பளத்துக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பணவீக்கம் வரலாறு காணாத உயர்வு
இச்சூழலில் தொழிலாளர்களின் வாங்கும் சக்தி மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாகவும், மாத நடுவிலேயே தங்கள் சம்பளம் தீர்ந்து விடுவதாகவும் இப்போராட்டத்தை நடத்திய அமைப்பான ஃப்ரண்ட் ஆர்கனைசேஷன் இன் ஸ்ட்ரகில் (Front of Organizations in Struggle (FOL)) அமைப்பினர் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
Women wore black funeral attire and sported flower crowns to mourn the ‘death’ of the wages of Argentine workers in a country where inflation is expected to hit 90% by the end of this year https://t.co/h0MSiFJvMO pic.twitter.com/sEiq3RKusH
— Ashrf Ben Ali Ⓜ️ (@AshrfSben) August 20, 2022
அர்ஜெண்டினா நாட்டின் தேசிய புள்ளியியல் நிறுவனமான INDEC இன் படி, அந்நாட்டின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியம் 45,540 அர்ஜென்டினா பெசோக்களாக ($334) உள்ளது, அதே சமயம் இரண்டு பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கான அடிப்படை உணவுக்கூடை (food basket) விலை இரு மடங்கு அதிகமாக 111,298 பெசோக்களாக ($817) உள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பல ஆண்டுகால அரசியல் முயற்சிகள் தோல்வியைத் தழுவி வரும் நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் பணவீக்கம் விகிதம் உச்சத்தை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Amitshah meet Junior NTR: மல்லுக்கட்டும் மருமகன்.. பேரனுக்கு மடைமாறும் பாஜக! ஜூனியர் என்.டி.ஆரை குறிவைக்கும் அமித்ஷா?!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்