துன்புறுத்தப்பட்ட பழங்குடியின சிறப்பு குழந்தை இப்போ எப்படி தெரியுமா? ஆதரவு தெரிவித்த பிரபல நட்சத்திரங்கள்
ஆஸ்திரேலிய பழங்குடியினத்தைச் சேர்ந்த குவாடன் பெய்ல்ஸ் என்ற சிறப்பு குழந்தைக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய பழங்குடியினத்தைச் சேர்ந்த குவாடன் பெய்ல்ஸ் என்ற சிறப்பு குழந்தைக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபல நட்சத்திரங்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உடல் வளர்ச்சி குறைபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதை தொடர்ந்து, சிறுவனுக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆதரவு வந்தது.
Quaden Bayles, an indigenous Australian boy who won the support of celebrities and well-wishers around the globe after being bullied because of his disability, has landed a role in the new "Mad Max" movie. https://t.co/PbmdSuYMDQ
— CNN (@CNN) August 22, 2022
இந்நிலையில், "Mad Max" என்ற புதிய படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆஸ்கார் விருது பெற்ற ஜார்ஜ் மில்லர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படமான "மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு"க்கு முந்தைய பாகமான "ஃப்யூரியோசா" திரைப்படத்தில் இச்சிறுவன் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்திருந்தார்.
சனிக்கிழமை அன்று, சிட்னி மார்னிங் ஹெரால்டின் குட் வீக்கெண்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் மில்லர், பிப்ரவரி 2020 இல் அவரது தாயார் அவரைப் பற்றி பகிர்ந்து கொண்ட துன்பகரமான வீடியோவைப் பார்த்து பெயில்ஸை பெரிய திரையில் வைக்கத் தூண்டப்பட்டதாக தெரிவித்தார்.
அகோண்ட்ரோபிளாசியா எனப்படும் ஒரு வகை குறைபாடுடன் பிறந்த பெய்ல்ஸ், மில்லரின் அடுத்த படமான "த்ரீ ஆயிரம் இயர்ஸ் ஆஃப் லாங்கிங்"-இல் இட்ரிஸ் எல்பா மற்றும் டில்டா ஸ்விண்டன் ஆகியோருடன் இணைந்து நடிக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் விவரித்த மில்லர் , "இது எங்களுக்கும் நல்லது. அவருக்கும் நல்லது. அவர் சிறப்பாக வேலை செய்கிறார். அவருக்கு ஃபுரியோசாவில் ஒரு சிறிய பாத்திரம் கிடைத்தது" என்றார். மில்லர் மற்றும் பேயில்ஸின் பிரதிநிதிகளை மேலும் கருத்துக்காக சிஎன்என் நிறுவனம் தொடர்பு கொண்டது.
2020ஆம் ஆண்டு வைரலான வீடியோ கிளிப்பில், தற்கொலை செய்து கொள்ள பேயில்ஸ் கத்தியைக் கேட்பதும் அவரது தாயின் காரின் பின்புறத்தில் கட்டுப்படுத்த முடியாமல் அவர் அழுவதையும் அதில் காணலாம்.
சிறப்பு குழந்தைகளை துன்புறுத்துவதால் ஏற்படும் தாக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவரது தாயார் பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்த வீடியோவில், "துன்புறுத்தினால் இப்படிதான் நடக்கும்" எனக் கூறினார். "சிறப்பு குழந்தைகள் குறித்து தயவுசெய்து, உங்கள் குழந்தைகள், உங்கள் குடும்பத்தினர், உங்கள் நண்பர்களுக்கு விழிப்புணர்வு செய்ய முடியுமா?" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ, ஆஸ்திரேலிய நடிகர் ஹக் ஜேக்மேன் உள்ளிட்ட பிரபலங்களின் கவனத்தையும் ஈர்த்தது. ட்விட்டரில் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்ட அவர், "எதுவாக இருந்தாலும், உங்களுக்கு என்னுள் ஒரு நண்பர் இருக்கிறார்" என்றார்.