Actor Arnold: அடுத்தடுத்து மோதிய கார்கள்.. விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்ட்!!
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ப்ரென்ட்வுட்டில் உள்ள சாலை ஒன்றில் நான்கு வாகன விபத்தில் சிக்கி காயமின்றி தப்பித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் ப்ரென்ட்வுட்டில் உள்ள சாலை ஒன்றில் வாகன விபத்தில் சிக்கி காயமின்றி தப்பித்துள்ளார். அதே விபத்தில், ஒரு பெண் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அர்னால்ட் செய்தித்தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நட்சத்திர நடிகரும், முன்னாள் கலிபோர்னியா ஆளுநருமான அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் தனது காரை ஓட்டிக்கொண்டிருந்தபோது, சன்செட் பவுல்வர்ட் மற்றும் ஆலன்ஃபோர்ட் அவென்யூ சந்திப்பில் மற்றொரு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. நடிகர் அர்னால்ட் ஓட்டி சென்ற SUV கார், முன் சென்ற சிவப்பு நிற காரின் மீது மோதியுள்ளது. அப்பொழுது ஏர்பேக்குகள் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு அர்னால்ட் உயிர் பிழைத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவியது. மேலும், பல கார்கள் கடுமையான சேதத்துடன் இருப்பதையும் அந்த படங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்து நடந்தது தொடர்பாக நடந்த விசாரணையில் வாகனம் ஓட்டியவர்கள் யாரும் போதைப்பொருள் அல்லது மதுபானம் விபத்துக்குள்ளானதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இருப்பினும், விசாரணை இன்னும் நடந்து வருகிறது.
ஆஸ்திரியாவை பூர்வீகமாகக் கொண்ட அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஒரு சாம்பியன் பாடி பில்டராக இருந்தவர். பின்னர் 1980 களில் ஹாலிவுட் நட்சத்திரமாகி "கோனன் தி பார்பேரியன்", "கமாண்டோ", "டெர்மினேட்டர்", "டோட்டல் ரீகால்" மற்றும் "ட்ரூ லைஸ்" ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Arnold Schwarzenegger involved in multi-car accident. Look at that beast he's driving. He's probably one of those that claim they care about the climate change. pic.twitter.com/AJ1Bc3Hbnf
— I Sold Farts In A Jar to Gov. Beshear (@BeckeyWander) January 22, 2022
நீண்ட காலமாக குடியரசுக் கட்சியில் இருந்த அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், 2003 ஆம் ஆண்டு ஆளுநர் கிரே டேவிஸை பதவி விலகிய பிறகு கவர்னர் பதவியை ஏற்றார். அவர் ஆளுநராக இருந்த காலம் கொந்தளிப்பானதாக இருந்ததாகவும், பொருளாதார சரிவு என இரண்டு முக்கிய பிரச்சனை தலைவிரித்தாடியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்