Astronaut Bone Loss: விண்வெளிக்கு போறதுன்னா சும்மாவா? எலும்பு வரையிலும் மாற்றம்வரும்.. ஆச்சரியம் தரும் ஆய்வு!
Astronaut Bone Loss: விண்வெளியில் உள்ள புவி ஈர்ப்பு விசை காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும்.
இதில் பலருக்கு பூமிக்கு திரும்பியதும் வழங்கப்பட்ட சிகிச்சைகளில் எலும்பு வலு பெற்றுள்ளது. ஆனால், 9 பேருக்கு எலும்புச் சிதைவு குணமாகவில்லை. இந்த ஆய்வுக்காக விண்வெளி சென்று திரும்பியவர்களை ஓராண்டுக்கும் மேலாக கவனித்து அதன் மூலம் ஆராய்ச்சி செய்துள்ளனர்.
Calgary பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லேய் கேபல் (Leigh Gabel) என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரையில் இது பற்றி விரிவாக கூறிப்பட்டுள்ளது.
the journal Scientific Reports https://www.nature.com/articles/s41598-022-13461-1
இதுகுறித்து கேபல் கூறுகையில், “ ஆறுமாதங்கள் விண்வெளியில் இருப்பவர்களின் எலும்புகளின் அடர்த்தி குறையும். பூமியில் ஒருவருக்கு இருபது ஆண்டுகளில் ஏற்படும் எலும்பு பலவீனம், எலும்பு வலிமை இழத்தல், அடர்த்தி குறைவு உள்ளிட்டவை, விண்வெளிக்கு சென்று ஆறு மாத காலம் அல்லது அதற்கு மேல் தங்கியிருந்தால் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அங்குள்ள புவி ஈர்ப்பு விசை இதற்கு காரணம்.” என்று கூறினார்.
விண்வெளியில் உள்ள புவி ஈர்ப்பு விசை காரணமாக உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். அதில் சில பூமிக்கு திரும்பிய கொஞ்ச நாட்களில் சரியாகும். சில மாற்றங்கள் மீண்டும் இயல்புக்கு திரும்பும் வாய்ப்பு இல்லாமல் போகிவிடும். எலும்புகளில் சில ஜாயிண்ட்கள் தொடர்பு அற்றுபோகும் நிலமையும் ஏற்படும். அப்படியானவைகளை சரி செய்ய முடியாது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்