Hybrid Solar Eclipse: 100 ஆண்டுகளுக்கு பின் தோன்றும் அரிய வகை சூரிய கிரகணம்.. இந்தியாவில் பார்க்க முடியுமா? எப்போது தோன்றும்? முழு விவரம்..
இன்று வானில் புது வகையான மாறுபட்ட சூரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது. இது hybrid solar eclipse என அழைக்கப்படுகிறது.
இன்று வானில் புது வகையான மாறுபட்ட சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இது hybrid solar eclipse என அழைக்கப்படுகிறது. இந்த மாறுபட்ட சூரிய கிரகணம் என்பது வளைய மற்றும் முழு சூரிய கிரகணத்தின் கலவையே ஆகும். இந்த கிரகணம் பார்ப்பதற்க்கு, சில நொடிகள் வரை நெருப்பு வளையமாக தோன்றும். சிலர் இதனை ring of fire என கூறுவார்கள்.
View this post on Instagram
சூரிய கிரகணம்:
சூரிய கிரகணம் என்பது பூமி, நிலா, சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவது தான், அதாவது நிலவு பூமி மற்றும் சூரியன் இடையே வரும் போது சூரியனை மறைக்கும். இது முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம் மற்றும் வளைய சூரிய கிரகணம் என மூன்று வகையாக தோன்றும்.
அந்த வகையில் இன்று நிகழும் சூரிய கிரகணம் Ningaloo சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது இந்தியாவில் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எப்போது தோன்றும்:
இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் என்பது மக்களின் இருப்பிடத்தைப் பொறுத்து வளைய கிரகணம் அல்லது முழு கிரகணமாக தோன்றும். வளைய கிரகணத்தின் போது, சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காது, அதன் விளைவாக, சூரியன் பாதி மறைந்ததுபோல் தோன்றும். ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள எக்ஸ்மவுத்தில் (Exmouth) மட்டுமே இந்த ஹைபிரிட் சூரிய கிரகணம் முழு சூரிய கிரகணமாக தோன்றும்.
Exmouth இல், பகுதி சூரிய கிரகணம் 6.04 AM AWST முதல் 9.02 AM AWST வரை இருக்கும் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தெரியும். ஆனால் முழு சூரிய கிரகணம் என்பது 7.29 AM AWST முதல் 7.30 AM AWST வரை மட்டுமே தெரியும், அதாவது ஒரு நிமிடத்திற்கும் குறைவாகவே இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இதுவாகும். ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்காசியா, பசிபிக் பெருங்கடல், அண்டார்டிகா மற்றும் இந்தியப் பெருங்கடல் ஆகிய பகுதிகளில் இருந்து இந்த அரிய சூரிய கிரகணம் தெரியும். இந்த சூரிய கிரகணம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தோன்றும் கடைசியாக 2013ஆம் ஆண்டு நிகழ்ந்தது.
இந்த சூரிய கிரகணம் சுமார் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே காணப்படுகிறது. கிட்டதட்ட இந்த கிரகணம் 5 மணிநேரம் 24 நிமிடங்கள் நீடிக்கிறது. அடுத்த முழு சூரிய கிரகணம் 2172 ஆம் ஆண்டு தோன்றும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.