ஜெகதீப் தன்கர் மாயம்: பாஜக சிறைபிடித்ததா? - செல்வப்பெருந்தகை கேள்வி
இந்தியாவின் முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார், இந்திய மக்கள் அவரை பார்க்க முடியவில்லை என்றால் ஆட்கொணர்வு மனு காங்கிரஸ் சார்பில் போட வேண்டி இருக்கும்.

விழுப்புரம்: இந்தியாவின் முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார், இந்திய மக்கள் அவரை பார்க்க முடியவில்லை என்றால் ஆட்கொணர்வு மனு காங்கிரஸ் சார்பில் போட வேண்டி இருக்கும் அவர் பதவியை ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யாரு அவரை இந்திய மக்களிடையே காட்டபட வேண்டுமென தமிழக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கம் திட்டம் இன்று சென்னையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் செயல்படும் அரசு உதவி பெறும் துவக்கபள்ளியில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை காலை சிற்றுண்டி விரிவாக்க உணவு திட்டத்தினை துவக்கி வைத்து பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டியை பருகினார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை... தமிழக முதலமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு திட்டம் உண்ணதனமான திட்டம் என்றும் தாயுமானமாகவும், தந்தையுமாகவும் தமிழக முதலமைச்சர் திகழ்வதாக கூறினார். இந்திய அரசியலில் மிகப்பெரிய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து ஒன்றிய அரசு செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், அது வாக்கு திருடாக இருக்கட்டும், பேச்சுரிமை, எழுத்துரினை பறிப்பதாக இருக்கட்டும் மக்களுடைய வரிப்பணத்தை பிடுங்குவதாக இருக்கட்டும் ஜி எஸ் டி வரியை 40 சதவிகிதம் வரை உயர்த்தி மக்கள் விரோத ஆட்சியாக ஒன்றிய அரசு செயல்பட்டுக்கொண்டு இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.
இந்தியாவின் முன்னாள் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் எங்கே இருக்கிறார், ராஜஸ்தானில் உள்ளவர்கள் இரண்டு நாட்களாக அவர் வெளியே வரவில்லை அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை பாஜகவை சார்ந்தவர்கள் அவரை எங்கையாவது சிறைப்பிடித்து இருக்கிறார்களாக முன்னாள் குடியரசு துணை தலைவரை மக்களிடம் காட்ட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த தேசத்தினுடைய முன்னாள் துணை குடியரசு தலைவரை பாஜக அரசு, அவர் மக்களிடம் செல்வதை தடுப்பார்கள். ஆனால் இது இந்திய அரசு அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் இயங்குகிற அரசு என பாஜகவினர் தெரிவிக்க வேண்டும் என கூறினார். முன்னாள் துணை குடியரசு தலைவரை வெளியே வரவிடாமல் தடுக்கிற சக்தி யார், இதுவரை அவர் வாய் திறக்கவில்லை வெளியில் வரவில்லை அவரை பற்றி அமித்ஷா பேசுகிறார்.
ஒருவேளை முன்னாள் துணை குடியரசு தலைவரை இந்திய மக்கள் பார்க்க முடியவில்லை என்றால் ஆட்கொணர்வு காங்கிரஸ் சார்பில் போட வேண்டி இருக்கும், ஏன் அவர் பதவியை ராஜினாமா செய்தார் அவர் ராஜினாமா செய்ய நெருக்கடி கொடுத்தது யாரு அவரை இந்திய மக்களிடையே காட்டப்பட வேண்டும்.
வழக்கறிஞராக இருந்தவருக்கே பாதுகாப்பு இல்லை அவரை வெளியே கொண்டுவந்து காட்ட பாஜக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியா கூட்டணி 50 விழுக்காட்டிற்கு மேல் மக்களிடையே வலிமையான வாக்குகளை பெற்றுள்ளதாகவும் மக்களிடையே செல்வாக்கு உள்ள கூட்டணி தான் இந்தியா கூட்டணி என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.





















