(Source: ECI/ABP News/ABP Majha)
வள்ளியூர்-ஆரல்வாய்மொழி இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவது இன்னொரு தேதிக்கு தள்ளிவைப்பு..
இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவது பின் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
வள்ளியூர் - ஆரல்வாய்மொழி ரயில் நிலையங்களுக்கு இடையே மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை இரட்டை ரயில் பாதை இணைப்பு பணிகள் நடைபெற இருப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது.
has advised that line block from 04.03.2022 to 13.03.2022 in connection with commissioning of double line between Aralvaymoli - Valliyur stations is postponed and revised dates will be notified.@drmmadurai | @GMSRailway | @Xavierk37544297 | @anandg_kalyang pic.twitter.com/lQYt7Up4wS
— Arunchinna (@iamarunchinna) February 26, 2022
இதன் காரணமாக திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் (22627/22628), தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் (16191/16192) மற்றும் புதுச்சேரி கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் (16861/16862) ஆகியவை மார்ச் 4 முதல் மார்ச் 13 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டு திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
Hence Tiruchi - Trivandrum Tiruchi intercity express (22627/22628),
— Arunchinna (@iamarunchinna) February 26, 2022
Tambaram - Nagercoil Tambaram Antyodaya express (16191/16192) and
Puducherry - Kanniyakumari - Puducherry express (16861/16862) trains will run as usual and as per schedule.@LPRABHAKARANPR3 | @RevathiM92 |
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - 10 ஆயிரம் வரை செலவு செய்தும் 10 ரூபாய்க்கு விலைபோகும் முள்ளங்கி - குப்பையில் கொட்டுவதாக விவசாயிகள் வேதனை
தற்போது இரட்டை ரயில்பாதை இணைப்பு பணிகள் நடைபெறுவது பின் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எனவே திருச்சி - திருவனந்தபுரம் - திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில், தாம்பரம் நாகர்கோவில் தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் மற்றும் புதுச்சேரி கன்னியாகுமரி புதுச்சேரி வாராந்திர விரைவு ரயில் ஆகியவை வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்படும்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Local body election 2022 : வெற்றிபெற்ற இளம் கவுன்சிலர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா ?