மேலும் அறிய

பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் காந்தி மரம் - திருச்சிக்கும் காந்திக்கும் உள்ள உறவு...!

திருச்சிக்கும் - காந்திக்கும் நீண்ட உறவு உள்ளது, கல்லூரி வளாகத்தில் இன்றவளவும் பராமரிக்கபட்டு வரும் காந்திமரம் பற்றி விரிவாக பார்ப்போம்.

இந்திய தலைவர்களில் பயணத்தை தன் வாழ்வின் ஒரு பகுதியாகக் கொண்டு எல்லா திசைகளிலும் பயணித்தவர் காந்தியடிகள். மனம், நிலம் என்று பிரிந்துகிடந்த இந்தியாவை இணைத்ததில் அவரின் பயணதிற்கு முக்கிய பங்குண்டு. தமிழர்களை அதிகம் நேசித்தார். இப்படி தமிழர்களை நேசித்த காந்தி திருச்சிக்கு ஆறு முறை பயணமாக வந்துள்ளார். தமிழ்நாட்டில் அவர் இருந்த 203 நாள்களில் திருச்சியில் 13 நாள்கள் அவர் தங்கி பயணித்துள்ளார். அண்ணலின் வரவை, தங்கிய நாள்களை இன்றும் திருச்சி தன் நினைவுகளில் பதிந்து வைத்துள்ளது. முதன் முதலில் அடிகளின் காலடி திருச்சியில் பட்டது 1919, செப்டம்பர் 25ல். நூறு ஆண்டுகள் முடிந்துபோயின. நங்கவரம் மிராசுதார் சுப்புராமய்யரின் சிந்தாமணி இல்லத்தில் தங்கினார். தில்லையாடி வள்ளியம்மையின் மன உறுதியை குறிப்பிட்டு, பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசினார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையை காந்தி அடிகளின் வருகை உறுதி செய்தது. கூட்டத்தில் சில இளைஞர்கள் சின்ன குழப்பம் செய்ய, ஒத்துழையாமையின் வலிமையை பாருங்கள். சிலரின் ஒத்துழையாமை பலரைக் கவனிக்க வைக்கிறது. இதையே அரசுக்கு எதிராக நீங்கள் எல்லோரும் செய்தால், விடுதலை உடனே கிடைக்கும் என்ற காந்தியடிகளின் நகைச்சுவையால் கூட்டமே அதிர்ந்தது.

பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் காந்தி மரம் - திருச்சிக்கும் காந்திக்கும் உள்ள உறவு...!

மேலும் தமிழகத்தில் காந்தியடிகளின் வரலாற்று நிகழ்வுகள் அதிகம் உள்ளது. அதிலும் குறிப்பாக திருச்சி மாவட்டத்திற்கும் காந்திக்கும் உள்ள தொடர்புகள் ஏராளம் என்றே சொல்லலாம். அவற்றில் ஒன்றாகவும், வரலாற்று சாட்சியாகவும் இருப்பது தான் திருச்சியில் உள்ள காந்தி மரம். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே 1934 ஆம் ஆண்டு தேசிய கல்லூரியும் ஒரு பள்ளியும் அமைந்திருந்தன. இந்த பள்ளியில் உள்ள மரத்தடியில் தான் மகாத்மா காந்தி பேராசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வந்தார். மகாத்மா காந்தி அமர்ந்த இடம் என்பதால் இன்றைக்கும் அது காந்தி மரம் என்று அழைக்கப்படுகிறது. தற்போது சத்திரம் பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் இந்திரா காந்தி கல்லூரியில் கடந்த 82 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தியடிகள் அமர்ந்து உரையாற்றிய அந்த மரம் இன்றளவும் பராமரித்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் அந்த மரத்தின் பெயர் காந்தியடிகளின் மரம் என்றே அழைக்கப்படுகிறது. இதுகுறித்து  கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவிகளிடம் கேட்டபோது காந்தியடிகள் நமது நாட்டிற்காகவும், நாட்டின் விடுதலைக்காகவும் அரும்பாடுபட்டவர் அவரைப் பற்றி புத்தகத்தில் மட்டுமே படித்திருக்கிறோம். அவரை நேரில் பார்க்கும் வாய்ப்பு  நம் யாருக்கும் கிடைக்காத போதிலும் கூட,  அவர் அமர்ந்து உரையாற்றிய இந்த மரம் எங்கள் கல்லூரியில் இருப்பதை மிகவும் பெருமையாகவும், பெருமிதமாகவும் நாங்கள் கருதுகிறோம் என்று தெரிவித்தனர்.

பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக நிற்கும் காந்தி மரம் - திருச்சிக்கும் காந்திக்கும் உள்ள உறவு...!

மேலும் காந்தியடிகள் இங்கு அமர்ந்து பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கியது மட்டுமல்லாமல் வருங்காலத்தில் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும். எப்படி செயல்பட வேண்டும், அவர்களுக்கு ஆசிரியர்களாக இருந்து கற்றுக் கொடுக்க வேண்டிய கடமைகளைப் பற்றி விரிவாக எடுத்துரைத்து உள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகள் கழித்தும் இன்றளவும் காந்தி மரம் இங்கு சிறப்பு வரலாற்று நிகழ்வாக திகழ்ந்து வருகிறது. இக்கல்லூரிக்கு மிகப்பெரிய ஒரு பெருமை சேர்த்த இடமாக இது கருதப்படுவதால் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருச்சிக்கும் காந்திக்கும் இடையே உள்ள உறவு மிகப் பெரியதாகும். அவர் எடுத்துரைத்த அறிவுரைகளும் அவர் நிலைநாட்டிய செயல்களும் திட்டங்களும் இன்றளவும் வரலாற்றை தலை நிமிர்ந்து பார்க்க வைக்கிறது என்றே கூறலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
“விஜய் ஆட்சிக்கு ஆசைப்படலாம்; தவறல்ல” - திருமாவளவன் வைக்கும் ட்விஸ்ட் - பரபரப்பில் அரசியல் களம்
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget