திருச்சியில் தயாரான புதிய ரக துப்பாக்கி... தோட்டா தெறிக்க தெறிக்க... மாஸ் ரகமாம்!
புதிய ரகத் துப்பாக்கி - இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ளத் துப்பாக்கித் தொழிற்சாலையில், திருச்சி கார்பைன் என்ற புதியதாகத் துப்பாக்கி உருவாக்கப்பட்டுள்ளது . இதன் அறிமுக விழாவானது தொழிற்சாலை வளாகத்தில் நடைபெற்றது. அப்போது, அதன் பொது மேலாளர் சஞ்சய் திவேதி, திருச்சி கார்பைன் துப்பாக்கியை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய ரகத் துப்பாக்கியானது படைக்கலன் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது. இது சிறிய மற்றும் இலகு ரக ஆயுதமாகும் - இதனை போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பராட்ரூப்பர்கள், காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படை வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள (special muzzle booster)சிறப்பு முகவாய் பூஸ்டர் மூலம், துப்பாக்கி சூட்டின் போது குறைந்த சத்தம், துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்டது.
அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே-47- னின் உதிரிப்பாகங்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் இதன் கூடுதல் சிறப்பு. துப்பாக்கிச் சூட்டின் போது வெளிச்சம் மற்றும் சத்தத்தைக் குறைத்து நீண்ட தூர இலக்கை துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட 'கார்பைன்' என்கிற புதிய ரகத் துப்பாக்கியை அறிமுகப்படுத்தி அசத்தியிருக்கிறது துப்பாக்கித் தொழிற்சாலை. இந்த துப்பாக்கியின் சிறப்புகளைக் குறித்துப் பேசியவர்கள்,”இந்தப் புதிய ரகத் துப்பாக்கி 3.1 கிலோ எடைகொண்ட. 7.6x39 மில்லிமீட்டர் அளவு கொண்டதாகவும் காவல்துறை, விமான நிலையங்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை மற்ற துப்பாக்கிகளுடன் ஒப்பிடும்போது இது சக்தி வாய்ந்த தனிப்பட்ட தானியங்கி ஆயுதமாகச் செயல்படும். துப்பாக்கிச் சூட்டின் போது சத்தம் மற்றும் வெளிச்சத்தைக் குறைத்து நீண்ட தூரம் உள்ள இலக்கை நோக்கித் தாக்கும் திறன் கொண்டது. இந்த ரகத் துப்பாக்கியைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது பாதுகாப்பு கவச உடையில் மறைத்து வைத்துப் பயன்படுத்தும் அளவிற்கு சிறியதாக இருக்கும். அதே போல் அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே-47னின் உதிரிப்பாகங்களை இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது தான் கூடுதல் சிறப்பு.
மேலும் ஏற்கனவே திருச்சி படைகலன் தொழிற்சாலையில் ( OFT ) தயாரிக்கப்பட்ட புதிய உறுதிப்படுத்தப்பட்ட ( எஸ்.ஆர்.சி.ஜி) ,இந்த தொலைநிலை கட்டுப்பாட்டு துப்பாக்கி 12.7 மி.மீட்டர் நீளம் கொண்டது - இதில் எம் - 2 நோட்டோ ஹெவி மிஷின் கண் பொருத்தப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் சிறிய கைவினைப் பொருட்களில் பொருத்தப்பட்ட கடல் பயன்பாடுகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் பகல் மற்றும் இரவு செயல்பாட்டின் போது துல்லியத்துடன் சிறிய படகுகள் மற்றும் கைவினை கலை தொலைவிலிருந்து ஈடுபடுத்த முடியும்.இந்த புதிய ரக துப்பாக்கியை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டது, என்பது குறிப்பிடத்தக்கது.