மேலும் அறிய

மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

திருச்சி மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிய உத்தரவு- மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன்.

திருச்சி மத்திய மண்டலமான தஞ்சாவூர், திருவாரூர், கரூர், புதுக்கோட்டை, நாகை, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, ஆகிய 9 மாவட்டங்களிலும் அதிக அளவில் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாக புகார்கள் வந்ததை அடுத்து மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவோர்கள், பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக குற்ற செயலில் ஈடுபடுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபட்டு கைது செய்து சிறையில் அடைக்கபட்டுள்ளனர். மேலும் பாலியல் தொந்தரவு, போதைப்பொருடகள் விற்பனை செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்க்கொள்ளபட்டு வருகிறது என்றார். அதனபடி திருச்சி மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த மூன்று ஆண்டுகளில் போக்சோ வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் விடுதலையான வழக்குகள் குறித்து தீவிர ஆய்வு நடத்த உத்தரவிடபட்டது.

மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

இதனை தொடர்ந்து நடத்திய  இந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு 52 வழக்குகளும், 2020, ஆம் ஆண்டு 53 வழக்குகளும் ,2021 ஆம் ஆண்டு  8 வழக்குகளும் என  பதியப்பட்ட  மொத்தம் 113 வழக்குகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் குற்றவாளிகளுடன் சமாதானமாக சென்றதால் வழக்கு விடுதலையானதாக தெரியவந்தது. மேலும்  ஒரு சில போக்சோ வழக்குகளில் ஊர் முக்கிய வக்கீல்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என அனைவரும் இணைந்து போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் காப்பாற்றுவதற்காக பாதிக்கப்பட்ட குழந்தை மற்றும் பெற்றோர்களை சமாதானம் செய்து வைத்தது தெரியவந்தது. இதையடுத்து தண்டனையில் முடிவுறாத வழக்குகள் பற்றி காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் கட்டப்பஞ்சாயத்து செய்து அதன் மூலம் வழக்குகள் விடுதலையில் முடிந்ததாக தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மத்திய மண்டலத்தில் போக்சோ வழக்குகளில் கட்டபஞ்சாயத்து செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத முறையில் கட்டப்பஞ்சாயத்து மூலம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது விசாரணையில் தெரியவந்தால் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். குறிப்பாக குழந்தைகளுக்கு பாதுகாப்பானவர்கள் பெற்றோர்கள் மட்டுமில்லை அரசும் பாதுகாவலர்கள் தான் ஆகவே  மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் விடுதலையான பல வழக்குகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என மத்திய மண்டல ஐஜி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மேலும் தொடர்ந்து சட்டத்திற்கு பிறம்பாக தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget