மேலும் அறிய

பல் பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட சிறுவன், அவனது பெற்றோர் சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் ஆஜர்

புகார் கொடுத்த அருண்குமார் தாயார் ராஜேஸ்வரி மற்றும் அவரது தந்தை கண்ணன் ஆகியோர் வழக்கறிஞருடன் விசாரணை அதிகாரி ஏடிஎஸ் பி சங்கர் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்கள் பிடுங்கியது சம்பந்தமாக புகார்கள் வந்ததின் பேரில் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்பீர் சிங் பணியிடை  நீக்கம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக  சேரன்மகாதேவி சார் ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.  பின் அவருடைய இடைக்கால அறிக்கையின் பரிந்துரையின் படி மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது. இந்த நிலையில் நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சுபாஷ் என்பவரின் புகாரின் பேரில் பல்வீர் சிங் மீது  நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருந்தனர். மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா அவர்களின் இரண்டு கட்ட விசாரணை அறிக்கையின் படி இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி காவல் ஆய்வாளர் உலக ராணி நியமிக்கப்பட்டார்.

அவர் இந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக புகார் கொடுத்த சுபாஷ் மற்றும் பலரிடமும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்த வழக்கை விசாரிப்பதற்காக மேலும் சிபிசிஐடி திட்டமிட்ட குற்றங்கள் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் அருண்குமார் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு சிபிசிடிஐ க்கு மாற்றப்பட்டு இந்த வழக்கை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கர் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு பல்வீர் சிங் மற்றும் சில காவலர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தார்.

மேலும் விக்கிரம சிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி, பல்வீர்சிங்  மீது மற்றொரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த இரண்டு வழக்குகள் சம்பந்தமாக விசாரணைக்கு ஆஜராகுமாறு கணேசன், அருண்குமார், இரண்டு சிறார்கள், ராசு, மகேந்திரன், சாம் ஆகியோர் இன்று நெல்லை சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராக சம்மன் வழங்கப்பட்டது. அதன்படி சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணை தொடங்கியது. புகார் கொடுத்த அருண்குமார் தாயார் ராஜேஸ்வரி மற்றும் அவரது தந்தை கண்ணன் ஆகியோர் வழக்கறிஞருடன் விசாரணை அதிகாரி ஏடிஎஸ் பி சங்கர் முன்னிலையில் ஆஜராகியுள்ளனர்.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் மூன்று காவலர்கள் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி அம்பாசமுத்திரம் காவல் உட்கோட்டத்தில் பற்கள் பிடுங்கியது சம்பந்தமான விசாரணையில் விக்கிரமசிங்கபுரம் காவல் நிலையத்தில் வேத நாராயணன் கொடுத்த புகாரின் பேரில் காவலர்கள் மணிகண்டன், விக்னேஷ் மற்றும் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் ஆகியோர்களின் மீது ஐந்து பிரிவுகளில் பிரிவு 294(B), 323, 324 ,326,506(1) இன் படி சிபிசிஐடி ஆய்வாளர் விஜயலட்சுமி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளார்.

தலைப்பு செய்திகள்

TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
CNG SUV: 28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
28.51KM மைலேஜ்..! டாப் 5 சிஎன்ஜி எஸ்யுவிக்கள் - விலை, வசதி , அம்சங்கள், ரேட்டிங் - முழு விவரம் இதோ
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Embed widget