கன்னியாகுமரியில் விடுதலைக்காக 4 ஆண்டுகளாக காத்திருக்கும் அரியவகை கழுகு...!
அரிய வகை கழுகை கூண்டில் அடைத்து சிறைப் படுத்தக்கூடாது என்றும் அதை உடனடியாக விடுவித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே அமைந்துள்ள உதயகிரி கோட்டையில் பல்லுயிரின பூங்கா செயல்பட்டு வருகிறது முழுக்க முழுக்க தமிழக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் மான்கள், மயில்கள், வண்ணத்துப் பூச்சிகள், குரங்குகள் என பல வகையான வன விலங்குகள் அரிய வகை பூச்சிகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன.அந்த வரிசையில் அரிய வகையை சார்ந்த "சினேரியஸ் கழுகு" எனப்படும் பிணம் தின்னி கழுகு ஒன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது மத்திய ஆசிய பகுதியை தாயகமாக கொண்ட இந்த கழுகு இந்தியா வில் அரிய வகை கழுகாகவே வரிசை படுத்தப்பட்டுள்ளது சுமார் மூன்றரை அடி உயரம், பெரிய கண்கள், கூரான நுனி உடைய வளைந்த அலகு, கால் விரல்களில் கூரான நகம், பறக்கும் போது சிறகுகளின் அகலம் 6-அடி 14-கிலோ வரை எடை என மெகா சைஸ் ல் காணப்படும் இந்த கழுகுகள் விண்ணுயர பறந்து தனது கழுகு பார்வையால் முழுக்க முழுக்க விலங்குகள் மீன்களை வேட்டையாடி உணவாக உட்கொள்ளும் இந்தியாவை பொறுத்தவரை வட மாநிலங்களில் அதிகம் காணப்படுவதாக கூறப்படுகிறது.
இந்த மெகா சைஸ் கழுகானது 2017ஆம் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது பாதை மாறி தமிழகத்தில் நுழைந்த இந்த கழுகு கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் உடலில் காயங்களுடன் பறக்க முடியாமல் கிடந்த நிலையில் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வனத்துறையினர் மீட்டனர். காயங்களுடன் இருந்த அந்த கழுகை வனத்துறையினர் உதயகிரி கோட்டைக்கு கொண்டு சென்று ஒக்கி புயலின் அடையாளமாக "ஓகி" என்று பெயர் சூட்டி கூண்டில் அடைத்து கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிட்சை அளித்து பராமரித்து குணமடைந்த நிலையில் கழிந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுமார் ஒன்றரை கிலோ வரை மாமிசமும் கொடுத்து பராமரித்து வருகின்றனர்.இதற்கிடையில் அரிய வகை கழுகை கூண்டில் அடைத்து சிறைப் படுத்தக்கூடாது என்றும் அதை உடனடியாக விடுவித்து வனப்பகுதியில் விட வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
உடனடியாக மத்திய மாநில அரசுகள் தலையிட்டு கழுகை வனப்பகுதியில் கொண்டு சென்று விட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.4 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கழுகு சுதந்திர காற்றை சுவாசிக்க அரசுகள் நடவடிக்கை எடுப்பார்களா ?பொறுத்திருந்து பார்ப்போம் !
மேலும் செய்திகளைப் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்