மேலும் அறிய

தமிழ் , ஆங்கிலம் நோ- ஹிந்தியில் இருந்தால் மட்டுமே போஸ்ட் அனுப்ப முடியும் - வட மாநில ஊழியரால் மக்கள் பரிதவிப்பு

தமிழ் ஆங்கிலம் தெரியாத வட மாநில ஊழியரால் கோவில்பட்டி தலைமை தபால் அலுவலகத்தில் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பொதுமக்கள் பரிதவிப்பு.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் எட்டயபுரம் சாலையில் தலைமை தபால் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவில்பட்டி நகர் மட்டுமின்றி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள், தொழிலாளர்கள் தலைமை தபால் அலுவலகத்தினை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக பதிவு தபால் அனுப்புவதற்கு அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பதிவு தபால் அனுப்பும் பகுதியில் சமீபகாலமாக அந்த பிரிவில் வட மாநிலத்தை சேர்ந்த ஊழியரை பணியில் ஈடுபடுத்தி வருவதாக கூறப்படுகிறது. அந்த ஊழியருக்கு தமிழ், ஆங்கிலம் தெரியவில்லை, ஹிந்தி மட்டும் தெரிவதால் பதிவு தபால் அனுப்ப வருபவர்கள் அனுப்ப முடியாமல் திரும்பி செல்லும் நிலை உள்ளது. நேற்றும் அந்த வட மாநில ஊழியர் பணியில் இருந்துள்ளார்.

தமிழ் , ஆங்கிலம் நோ- ஹிந்தியில் இருந்தால் மட்டுமே போஸ்ட் அனுப்ப முடியும் - வட மாநில ஊழியரால் மக்கள் பரிதவிப்பு

அப்போது வழக்கறிஞர் பரத் என்பவர் பதிவு தபால் அனுப்ப சென்ற போது தமிழ், ஆங்கிலத்தில் இருந்தால் பதிவு தபால் அனுப்ப முடியாது. ஹிந்தியில் இருந்தால் மட்டுமே அனுப்ப முடியும், தனக்கு, தமிழ், ஆங்கிலம் டைப் செய்ய தெரியாது என்று அலட்சியமாக கூறியுள்ளார். இதையடுத்து வழக்கறிஞர் பரத் மற்றும் 10க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பதிவு தபால் அனுப்ப முடியாமல் பரிதவித்துள்ளனர். இதையடுத்து அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது மட்டுமின்றி,, இது குறித்து தலைமை தபால் அலுவலக அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். இதன் பின்னர் தமிழ் தெரிந்த ஊழியரை வைத்து பதிவு தபால் வாங்கி அதற்கான ரசீது வழங்கியுள்ளனர்.

தமிழ் , ஆங்கிலம் நோ- ஹிந்தியில் இருந்தால் மட்டுமே போஸ்ட் அனுப்ப முடியும் - வட மாநில ஊழியரால் மக்கள் பரிதவிப்பு

பொதுவாக பதிவு தபால் அதிகளவு அரசு அலுவல் தொடர்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தமிழ், ஆங்கிலம் தெரியாமல் ஹிந்தி தெரிந்தவரை மட்டும்  பணியில் அமர்த்தி உள்ளதால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாகவும், இனி இது போல் நடக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர். நேற்று ஒரு நாள் மட்டுமே அவர் பணியில் அமர்த்தபட்டதாகவும், ஆட்கள் பற்றாக்குறை காரணமாக அந்தப் பிரிவில் பணி செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தபால் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?

கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்

ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்

Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS meets Amit shah | ஆட்சியில் பங்கு கேட்ட பாஜக கறார் காட்டிய இபிஎஸ் அ.மலைக்கு துணை முதல்வர்? ADMKEPS Delhi Visit: டெல்லிக்கு பறந்த EPSதனியாக சென்ற SP வேலுமணி உறுதியாகிறதா பாஜக கூட்டணி? |ADMK | BJPEPS போட்ட கண்டிஷன்! OK சொன்ன அமித்ஷா! குஷியில் வானதி, நயினார்Manoj Bharathiraja | பாரதிராஜாவின் மகன் மரணம்! திரையுலகில் அதிர்ச்சி... காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
RR vs KKR: சுழலில் சிக்கிய ராஜஸ்தான்.. காப்பாற்றிய துருவ் ஜூரல்.. கொல்கத்தாவுக்கு இலக்கு என்ன?
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்..  என்ன சொல்றீங்க? முழு விவரம்
கிளாம்பாக்கம் வேண்டாம்.. இனி கேரளா-கோவைக்கு கோயம்பேட்டில் இருந்தே போகலாம்.. என்ன சொல்றீங்க? முழு விவரம்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
ரூ.2.5 கோடி ஒப்பந்தம்: மகளிர் சுயஉதவிக்குழுக்களின் பொருட்கள்னாலே தரம்தான்
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Bharathiraja: கவுண்டமணியை அடித்த பாரதிராஜா..! ஏன் நடந்தது இந்த காரியம்?
Manoj Bharathiraja: இறுதிவரை அந்த ஒரு விஷயத்திற்காக போராடிய மனோஜ் பாரதிராஜா..!

TN 12th Exam: முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு; விடைத்தாள் திருத்தம் எப்போது? தேர்வு முடிவுகள்?

CBSE: இனி பொதுத்தேர்வுகளில் கால்குலேட்டர் அனுமதி, டிஜிட்டல் முறையில் மதிப்பீடு; சிபிஎஸ்இ அதிரடி!

பஞ்சப்பூரில் படக்குன்னு பிளாட்டை வாங்கினா... நீங்கதான் அதிர்ஷ்டசாலி: ஏன் தெரியுங்களா?

Embed widget