மேலும் அறிய
Advertisement
பெத்தமனம் பித்து; பிள்ளை மனம் கல்லு - மழையால் இடிந்த வீடு; பிள்ளைகள் கைவிட்டதால் கையேறு நிலையில் மூதாட்டி
’’5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் யாரும் வேலம்மாளை கவனிப்பதில்லை என்பதால், அவர் மட்டும் தான் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார்'’
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே மழைக்கு வீடு இடிந்து போனதால் வேலம்மாள் என்கிற 62 வயது மூதாட்டி தார்பாய் அமைத்து வசித்து வருகிறார். கணவனும் இல்லை, பிள்ளைகளும் கைவிட்ட நிலையில் மழைநீர் சகதியிலும், விஷபூச்சிகளுடன் தனது வாழ்வினை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள மூதாட்டி வேலம்மாள் அரசின் உதவிக்கரத்தினை எதிர்ப்பார்த்து காத்து இருக்கிறார்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயுரம் தாலூகாவிற்குட்பட்ட ஊராட்சி அயன்ராசாபட்டி. இந்த ஊராட்சியில் உள்ள கைலாசபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மனைவி வேலம்மாள், இந்த தம்பதிக்கு 3 மகன்கள், 2 பெண்கள். விவசாய கூலி வேலை செய்து வந்த கருப்பையா கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வேலம்மாள் தான் கூலி வேலை பார்த்து குடும்பத்தினை காப்பாற்றி வந்தார். அவருடைய 5 பிள்ளைகளுக்கும் திருமணமாகி அனைவரும் வெளியூரில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் யாரும் வேலம்மாளை கவனிப்பதில்லை என்பதால், அவர் மட்டும் தான் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். கணவனும் இல்லை, பிள்ளைகளும் கவனிக்கவில்லை என்பதால் மிகுந்த வறுமையுடன் 100 நாள் வேலைக்கு செல்வது, விவசாய கூலி வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தினை கொண்டு தனது வாழ்வினை நடத்தி வருகிறார். 62 வயதான மூதாட்டி. உடல்நிலை வேறு பாதிப்பு இருப்பதால் பல நாள்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் ரேஷனில் கிடைக்கும் அரியை வாங்கி கஞ்சி காய்ச்சி வடித்து தனது வாழ்நாள்களை கழித்து வருகிறார்.
தனது வறுமை மற்றும் வயோதிகத்தினை கருத்தில் கொண்டு அரசு வழங்கும் மாத உதவி தொகை கேட்டு பலமுறை மனு அளித்தும், அந்த மனுக்கள் கிணற்றி போட்ட கல் போல இருப்பதால் உதவி தொகையும் கிடைக்கவில்லை, வயதான காலத்திலும் தனது உடல் நிலையை பார்க்கமால் உழைத்து வாழும் வேலம்மாளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த வடகிழக்கு பருவமழை வடிவில் மற்றொரு துயரத்தினை அடைந்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அவரது ஓட்டு வீட்டின் பல பகுதிகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து பெயர்ந்து மட்டுமின்றி,மேற்கூரையும் சேதமடைந்து சுற்றுசுவர்களும் விரிசல் அடைந்தன. உணவிற்கே அல்லப்படும் வேலம்மாளினால் வீட்டினை சீரமைக்க முடியாத நிலை. வேறு வழியில்லமால் தார் பாய் வாங்கி அதனை வீட்டு முழுவதும் கட்டி வசித்து வருகிறார். அதிக மழை பெய்ய தொடங்கினால் தார்பாயையும் மீறி வீட்டிற்கு தண்ணீர் புகுந்து விடுவதால் மழைநீர் தேங்கிய சேற்றில் தான் மூதாட்டி வேலம்மாள் வசித்து வருகிறார்.
வீடு இடிந்து சேதமடைந்த போது மின் இணைப்பும் துண்டிகப்பட்டதால், மின்வசதி இல்லமால் இரவுவில் மெழுகுவர்த்தி, மண்ணெணெய் விளக்கு வெளிச்சத்தில் தான் இருந்து வருகிறார். சுற்றுச்சுவர்களும் சேதமடைந்து ஆங்கங்கே துளைகள் காணப்படுவதால் அந்த துளைகள் வழியாக பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளும் வேம்மாள் வீட்டிற்கு ஹாயாக வந்து செல்லும் நிலை உள்ளது. இனி அடுத்து மழை பெய்யதால் இருக்க கூடிய சுற்றுசுவர்களும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் நிலை தான் உள்ளது. கணவனும் இல்லை, பிள்ளைகள் ஆதரவும் இல்லமால் இடிந்து போன வீட்டில் தார் பாய் அமைத்து வாழ்ந்து வரும் வேலம்மாளின் நிலைமையை கருதி அவருக்கு பசுமை வீடு கட்டி தருவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுப்படுது மட்டுமின்றி, மாத உதவி தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மூதாட்டி வேலம்மாளின் கோரிக்கையாக உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion