மேலும் அறிய

Watch Video: தஞ்சையை முற்றுகையிடும் நீர் காக்கைகள்...! - தண்ணீரில் மூழ்கி இரையை தேடுகிறது

’’வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன’’

வலசை போதல் என்பது பறவைகள், விலங்குகள் ஆகியவை பருவகாலங்களை ஒட்டி புலம் பெயருவதைக் குறிக்கும். எல்லா விலங்குகளும் பறவைகளும் வெப்பநிலை வேறுபாட்டை உள்ளூர் உணர்கின்றன. மேலும் மனிதனைப் போலவே, விலங்கினங்கள் கோடைக்காலத்தைக் குளிர்ந்த இடங்களிலும், குளிர்காலத்தை வெதுவெதுப்பான இடங்களிலும் கழிக்க விரைகின்றன. அவை தங்கள் வாழிடத்தைப் பல்வேறு பருவகாலங்களில் மாற்றிக் கொள்கின்றன. குறிப்பிட்ட காலங்களில் விலங்குகள் அல்லது பறவைகள் தங்களின் வாழிடத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட காரணங்களுக்காக இடப்பெயர்வு செய்வது வலசை போதல் எனப்படும். அவை குழுக்களாகச் செல்லும் போது அவற்றைக் கொன்று தின்னும் உயிரிகளிடமிருந்து பாதுகாக்கப்படுகின்றன. வலசை போகும் பறவைகள், பூமியின் காந்தவிசையில் ஏற்படும் மாற்றங்களை உணர்கின்றன. அதன் உதவியுடன் அவை தங்களது சேருமிடத்தைக் கண்டறிகின்றன.

இது பறவைகள் புலப்பெயர்வு எனப்படுகின்றது. இவ்வாறு புலம்பெயரும் பறவைகள் இதற்காகப் பல்வேறு உத்திகளைக் கையாளுகின்றன. ஒவ்வொரு வருடமும் பகல் பொழுது குறையும் காலங்களில் உணவு கிடைப்பதும் குறைகிறது. அப்போது பல பறவைகள் வெதுவெதுப்பான நல்ல சாதகமான தட்ப வெப்பநிலையை நோக்கி நீண்ட தூரம் பறந்து செல்லத் தம்மைத் தயார்படுத்திக் கொள்கின்றன. இடப்பெயர்ச்சி தொடங்குவதற்கு பல நாட்களுக்கு முன்னதாகவே பறவைகள் பயணத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கின்றன. அதிக உணவை உண்டு, கூடுதலாக ஓர் அடுக்கு கொழுப்பை உடலில் சேர்த்துக் கொள்கின்றன. சில பறவைகள் கூட்டமாக எப்படி அணிவகுத்துச் செல்வது என்று ஒத்திகைகள் கூடப்பார்க்கின்றன.  பிறகு, ஒருநாள் ஆழமான மூதாதைப் பண்புகளின் தூண்டலால் உந்தப்பட்டு முன்பின் அறியாத இடங்களுக்கு செல்லத் துவங்குகின்றன.


Watch Video: தஞ்சையை முற்றுகையிடும் நீர் காக்கைகள்...! - தண்ணீரில் மூழ்கி இரையை தேடுகிறது

வட பிரதேசக் கோடை காலத்தின் நீண்ட பகற்காலம், புதிதாகப் பொரித்த குஞ்சுகளுக்கு உணவு ஊட்டுவதற்கான அதிக வாய்ப்புக்களைக் கொண்டது. இக்காலத்தில் இப்பகுதிகளில் உணவும் கூடுதலாகக் கிடைக்கும். இலையுதிர் காலத்தில் பகற்காலம் சுருங்கி, உணவு கிடைப்பதும் அரிதாகும்போது பறவைகள் வெப்பப் பகுதிகளுக்கு வருகின்றன. இப் பகுதிகளில் பருவகாலங்களைப் பொறுத்து, உணவு கிடைப்பதில் அதிக மாற்றம் இருப்பதில்லை. இவ்வாறு புலம்பெயர்வதால் கிடைக்கும் நன்மைகள், களைப்பு, சக்திச் செலவு, புலப்பெயர்வின் போது ஏற்படும் ஆபத்துக்கள் என்பன போன்ற பாதக அம்சங்களை  ஈடு செய்யக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

புலப்பெயர்வுக்கு முந்திய காலப்பகுதியில், பல பறவைகளில் அதிகரித்த செயற்பாடுகள் அல்லது  புலப்பெயர்வு அமைதியின்மை காணப்படுகின்றது. அத்துடன் அதிகரித்த கொழுப்புப் படிதல் போன்ற உடற்கூற்றியல் மாற்றங்களும் ஏற்படுகின்றன. அத்துடன் இயற்கையாகப் புலம்பெயரும் பறவைகளிடம் நிகழும் பறப்புத் திசை மாற்றமும் ஏறத்தாழ அதே காலத்திலேயே கூண்டுப் பறவைகளிலும் நிகழ்வதும் அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் வரும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கல்லணை  கால்வாய், வெண்ணாறு, வடவாறு, வெட்டாறு, குடமுருட்டி, காவிரி, கொள்ளிடம் ஆற்றுப்பகுதிகளில்  லட்சக்கணக்கான நீர் காக்கைகள் வந்து செல்வது வழக்கமாக கொண்டுள்ளது. இப்பறவைகள், அதிகாலையிலேயே ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர் காக்கைகள், கூட்டம் கூட்டமாக பறந்து வந்து தண்ணீரில் நீந்தியும், முழ்கி இரைகள் திண்கின்றது. இதே போல் சுமார் 10 க்கும் மேற்பட்ட நீர் காக்கை கூட்டமாக வந்து செல்கின்றன. அப்பறவைகள் வரும் போது, சாலைகளே இருட்டாக நிலை ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டு குறிப்பிட்ட மாதத்தில் வருவதால், அவைகள் இனப்பெருக்கத்திற்காக வருவதாக கூறப்படுகிறது. மீண்டும் மார்கழி மாதம் இறுதியில் நீர் காக்கை பறவைகள் சென்று விடுகிறது.  இதனை பார்ப்பதற்காக ஆற்றுப்பாலம் பகுதியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் நின்று ரசிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Watch Video: தஞ்சையை முற்றுகையிடும் நீர் காக்கைகள்...! - தண்ணீரில் மூழ்கி இரையை தேடுகிறது

வருடந்தோறும் பறவைகளின் வரத்து அதிகரித்து வருவதால், மாவட்ட நிர்வாகம் சார்பில் அவைகளுக்கு பாதுகாப்பு கொடுப்பதோடு, தென்பெரம்பூர் போன்ற பகுதிகளில் சரணலாயம் அமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பறவைகளில் நுாற்றுக்கும் மேற்பட்டவைகள் கூட்டமாக  செல்லும் போது, ஒரு நீர் காக்கா மட்டும் முன்னே செல்லும், அதன் பின்னால் முக்கோன வடிவில் மற்ற நீர் காக்காக்கள் செல்லும், சிறிது துாரம் பறந்தவுடன், பின்னால் வரும் நீர் காக்காக முன்னே செல்லும், அதனை மற்ற நீர் காக்காக்கள் தொடர்ந்து செல்லும். நீர் காக்காகைகளில் மூத்த நீர் காக்காக்கள் வழிகாட்டும், அதனை பின்தொடரும். சிறிது துாரத்திற்கு பிறகு மற்றொரு மூத்த நீர் காக்கா, முன்னே வரும். இந்த நிகழ்வு, மூத்த வயதுடையோரை பின் பற்றி தொடர்ந்தால், வாழ்க்கை நலமாக இருக்கும் என்பதற்கு எடுத்துகாட்டு என முதியவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget