மேலும் அறிய

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன் வெளியூரிலிருந்து வரும்  பயனிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும்

பேருந்து நிலையம் திறந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம். 

திருவாரூரில் இயங்கி வந்த பழைய பேருந்து நிலையம் போதிய  இடவசதி இன்றியும் நகருக்குள் வரும் இருசக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் நிலையில் இருந்த காரணத்தினால் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்கிற கோரிக்கை வலுத்தது. கடந்த 2011 ஆம் ஆண்டு திருவாரூர் விளமல் அருகே தியாகபெருமாநல்லூரில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பேருந்து நிலையம் கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்ததால்  8 ஆண்டுகள் கழித்து இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ந் தேதி ரூ 13 கோடியே 36 லட்சம் மதிப்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது.இந்த புதிய பேருந்து நிலையத்தின் முகப்பு நுழைவாயில் பேருந்துகள் உள்ளே வருவதற்கும் வெளியே சென்று முக்கிய சாலையை அடைவதற்குமுள்ள வழியானது கடந்த 2020 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பெய்த மழையின் காரணமாக பள்ளங்கள் ஏற்பட்டு சேதமடைந்தது. இதனையடுத்து சேதமடைந்த சாலைகளை ஜல்லி சிமெண்ட் கலவையை கொட்டி அப்போது தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெய்த பருவ மழையின் காரணமாக மீண்டும் சாலைகளில் பல இடங்களில் குண்டு, குழியுமானது. இதனால் பேருந்துகள் பேருந்து நிலைத்திற்குள் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே இடறி விழும் அளவிற்கு பள்ளங்கள் இருந்து வருகிறது.

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

இந்த புதிய பேருந்து நிலையத்தில் திருவாரூர் நகராட்சி சார்பில் இலவச கழிவறை கட்டித் தரப்பட்டது. ஆனால் இந்த கழிவறை நகராட்சியால் உரிய பராமரிப்பு செய்யப்படாத காரணத்தினால் யாரும் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் இந்த இலவச கழிவறை என்பது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது அதில் மது அருந்துவது கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் இளைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இலவச கழிவறை அசுத்தமாக இருக்கும் காரணத்தினால் தனியார் கழிவறைக்கு பயணிகள் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது அதன் காரணமாக ஒப்பந்தம் எடுத்துள்ள நபர்கள் கழிவறைக்கான கட்டணத்தை கூடுதலாக வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதேபோன்று புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி இருசக்கர வாகன பாதுகாப்பாகத்தை ஒப்பந்தம் எடுத்துள்ளவர்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

அடிப்படை வசதிகள் இன்றி அலங்கோலமாய் காட்சியளிக்கும் திருவாரூர் புதிய பேருந்து நிலையம்

மேலும் புதியபேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று எழுதி மட்டுமே இருக்கிறது அதில் இருக்கிற இரண்டு பைப்பிலும் தண்ணீர் வருவதில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்லும் பேருந்துகள் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் வந்துதான் செல்ல வேண்டும். இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கான எவ்வித வசதியும் இல்லாததால் கால் கடுக்க காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் நிலவுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் இந்த பேருந்து நிலையம் மது பிரியர்களின் கூடாரமாகவும் தனிமையை விரும்பும் காதலர்களின் புகலிடமாகவும் இருப்பதாகவும் மேலும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பேருந்து நிலையம் இருப்பதாகவும் பொதுமக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமான திருவாரூரில் இது போன்ற நிலை உள்ளது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது என பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பலமுறை நகராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு போர்க்கால அடிப்படையில் குடிநீர் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே செய்து தருவதுடன் வெளியூரிலிருந்து வரும்  பயனிகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய நிலையை உருவாக்க வேண்டும் என்பதே திருவாரூர் நகர பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Embed widget