மேலும் அறிய

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் மின் சாதனங்களை மழை நேரங்களில் எவ்வாறு பாதுகாப்பாக கையாள்வது மின் இணைப்புகள் போன்றவற்றில் எவ்வாறு எச்சரிக்கையாக செயல்படுவது மழை நேரங்களில் அறுந்து கிடக்கும் மின் கம்பிகளிடம் எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது போன்றவற்றை குறித்து  பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மின்சார வாரியத்தின் சார்பாக வைக்கப்பட்டுள்ளன. மேலும் மின்சார வாரிய அலுவலகங்களிலும் மழை புயல் போன்ற இயற்கை சீற்ற நேரங்களில்  பொதுமக்கள் மின்சாதனங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் மின் சாதனங்களை அலட்சியமாக பயன்படுத்துவோர் மற்றும் மின்சார வேலைகளில் ஈடுபடுவோர் கவனக்குறைவாக செயல்படுவதால் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. அதில் குறிப்பாக திருவாரூர் அலிவலத்தைச் சேர்ந்த மின்சார வாரியத்தில் லைன் மேனாக பணிபுரியக்கூடியவர் கவனக்குறைவாக இருந்ததால் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் அலிவலம் புது தெருவை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகன் 28 வயதான ஞானபிரகாஷ். இவர் அம்மாபேட்டை மின்சார வாரியத்தில் லைன்மேனாக கடந்த இரண்டு வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 28 வயதான இவருக்கு திருமணத்திற்காக பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்  சனி, ஞாயிறு விடுப்பு எடுத்து  சொந்த ஊரான அலிவலத்திற்கு ஞானப்பிரகாஷ் வந்துள்ளார். 

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

அவர் சொந்த ஊருக்கு வரும்போது  உறவினர் மற்றும் நண்பர் வீடுகளில் மின்சாதனம் மற்றும் மின் இணைப்புகளில் ஏதேனும் பணிகள் இருந்தால் பார்த்து கொடுப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை அவர் நட்பின் அடிப்படையிலும் அதே சமயம் வருமானத்திற்காகவும் இது போன்ற சிறிய பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் அலிவலம் ஊராட்சிக்குட்பட்ட சமத்துவபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொண்டதற்கு இணங்க  தெருவிளக்கு சரி செய்யும் பணியில் ஞானப்பிரகாஷ் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது அவர் சற்று கவனக்குறைவாக இருந்ததால் அவர் மீது மின்சாரம் தாக்கி உள்ளது இதில் ஞானபிரகாஷ்  மின்சாரம் தாக்கி வீசப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த  அருகில் இருந்த பொதுமக்கள் அவரை ஆம்புலன்ஸிற்காக காத்திருக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் இருசக்கர வாகனத்தில் வைத்து விரைவாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி ஊழியர் உயிரிழப்பு

இது குறித்து உடனடியாக திருவாரூர் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் தாலுகா காவல்துறையினர் ஞானபிரகாஷின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவருக்கு உடற்குறைவுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு விசாரணையினையும் தாலுகா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.  திருமணத்திற்கு வரன் பார்த்து வந்த நிலையில் 28 வயதான ஞானபிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் உறவினர்கள் நண்பர்கள் என அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும்  பெருந்திரளாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு குவிந்ததுடன் கண்ணீர் விட்டு அழுதது காண்போரின் நெஞ்சை கணமாக்கியது. மின்சார வாரியத்தில் ஊழியராக பணிபுரியக்கூடிய ஞானப்பிரகாஷ் கவனக்குறைவாக செயல்பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகாத 28 வயதான மின்சார வாரிய ஊழியர் ஞானப்பிரகாஷ் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்Vikravandi By Election | ’’வராதீங்க ஸ்டாலின்’’தடுக்கும் அமைச்சர்கள்..விக்கிரவாண்டியில் பரபரப்புMayors Resign | ஆட்டம் காட்டிய மேயர்கள்..அடக்கி ஆளும் ஸ்டாலின்!களையெடுப்பு ஆரம்பமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
Team India Victory Parade LIVE: இந்திய அணிக்கு கெளரவம்.. 125 கோடியை வழங்கிய பிசிசிஐ!
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
எம்.பி, எம்.எல்.ஏ-க்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்: திட்ட விரிவாக்க நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு
"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Pakistan Milk Price: என்னது! ஒரு லிட்டர் பால் விலை ரூ.370 ஆ? - அதிர்ச்சியில் பாகிஸ்தான் மக்கள்! காரணம் என்ன?
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
Team India Marine Drive: மிளிரும் டி20 உலகக் கோப்பை.. அதிரும் வான்கடே மைதானம்! வரிசை கட்டி நிற்கும் ரசிகர்கள்
அப்போலோ மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி
அப்போலோ மருத்துவமனையில் இருந்து எல்.கே. அத்வானி டிஸ்சார்ஜ்!
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
’குடி’மகன்களுக்கு அதிர்ச்சி! விழுப்புரத்தில் 4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு ! காரணம் என்ன?
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Paris Olympics 2024: பாரிஸ் ஒலிம்பிக்.. இந்திய தடகள வீரர்கள் அறிவிப்பு - 5 தமிழக வீரர்களுக்கு இடம்!
Embed widget