மேலும் அறிய

Virus : திருவாரூரில் 4 வயது சிறுமிக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல்..! மக்கள் அதிர்ச்சி..

திருவாரூரில் 4 வயது சிறுமிக்கு ஜப்பானீஸ் என்கலிப்டஸ் என்ற காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூரில் நான்கு வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி  முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார். 

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஜப்பானிய வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப் ராஜ் தெரிவித்தார்.

திருவாரூரில் நிருபர்களிடம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜோசப் ராஜ் கூறியதாவது, "திருவாரூர் மாவட்டத்தில்  4 வயது சிறுமி ஒருவருக்கு ஜப்பானீஸ் என்கலிப்டஸ் என்ற காய்ச்சல் பாதித்துள்ளது அந்த குழந்தைக்கு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த குழந்தை நல்ல நிலையில் உடல் நலம் தேறிவருகிறார்." இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், அவர் கூறும்போது, "மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காய்ச்சல் வார்டில் 17 குழந்தைகள், 9 ஆண்கள், 11 பெண்கள் உட்பட 37 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த ஓரிரு வாரத்துக்கு முன்பு, அதிகரித்திருந்த காய்ச்சல் தற்சமயம் வெகுவாக குறைந்துள்ளது. திருவாரூர் அருகே திருவாசல்  கிராமத்தில் நடைபெற்ற கர்ப்பிணி பெண்ணுக்கு ஐந்தாம் மாதம் மருந்து கொடுக்கும் நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவு சாப்பிட்டவர்கள், ஒரு நாள் கழித்து ஆறாம் தேதி 10 பேரும், 7ம் தேதி 9  பேரும், 8ம்  தேதி (இன்று) ஒரு பெண்மணியும் சிகிச்சையில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக ஆறாம் தேதி சிகிச்சைக்கு வந்த செல்வமுருகன் (24)  என்ற இளைஞர் ஒரு நாள் தாமதமாக சிகிச்சைக்கு வந்த நிலையில், அவருக்கு ஏற்கனவே பாதிப்புகள் அதிகரித்து இருந்ததால் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி  உயிரிழந்துள்ளார்.

Virus : திருவாரூரில் 4 வயது சிறுமிக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல்..! மக்கள் அதிர்ச்சி..

ஆனால், அவர் இறப்புக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை  என்று சிலர் தகவல்களை பரப்புகின்றனர். அதனை நாங்கள் முற்றிலும் மறுக்கின்றோம். அந்த இளைஞர் சிகிச்சைக்கு வந்தபோதே ரத்த அழுத்தம் அதிக அளவு இருந்தது. அவருக்கு தேவையான  சிகிச்சைகளை, அதற்குரிய மருத்துவர்கள் இருந்து வழங்கினார்கள். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாக பாதித்திருந்ததால் அவரது உடல் சிகிச்சையை ஏற்க வில்லை. எனவே அந்த இளைஞருக்கு உரிய சிகிச்சைகள் அழைக்கப்படவில்லை என்கின்ற தகவல் வதந்தி என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் அசைவ உணவு வகைகளை பார்த்து, பழைய கறிகள் இல்லை என்பதை உறுதி செய்து சாப்பிட வேண்டும். சாப்பிட்ட பின்னர் ஏதாவது உடல் கோளாறுகள் ஏற்பட்டால், உடனடியாக மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

Virus : திருவாரூரில் 4 வயது சிறுமிக்கு ஜப்பானிய வைரஸ் காய்ச்சல்..! மக்கள் அதிர்ச்சி..

தாங்களாக மருந்து கடைகளில் மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. மேலும் உயிரிழந்த இளைஞரது உடற்கூறு ஆய்வு அறிக்கை முதற்கட்டமாக வழங்கப்பட்டு விட்டது மேலும், உறுப்புகள் எந்த அளவிலான பாதிப்பை அடைந்துள்ளன என்பது குறித்த அறிக்கையையும் போலீசாரிடம் வழங்க இருக்கிறோம்ஊ

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தநிலையில் புலிவலத்தில் கர்ப்பிணி பெண்ணின் சுப நிகழ்ச்சியில் உணவருந்திய இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில் உணவு மாதிரியை சேகரிக்க முடியவில்லை என்றும் அந்த இரண்டு கடைகளிலும் பூட்டி இருப்பதாகவும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல் செய்தனர்.முதற்கட்ட மருந்து அறிக்கையில் உணவு ஒவ்வாமை என்று தெரியவந்துள்ளதாக மருத்துவ கல்லூரி முதல்வரும் மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPS Son Jaya Pradeep: ”அதிமுகவின் உண்மை தொண்டன்” செங்கோட்டையனுக்கு ஆதரவு! ஓபிஎஸ் மகன் செக்!Sivagangai Bonded labour : ”தமிழ்நாட்டில் ஓர் ஆடுஜீவிதம்” 20 ஆண்டு கொத்தடிமை! மீட்கப்பட்ட பின்னணி?Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனைCar Accident CCTV: மின்னல் வேகம்.. பேருந்தில் சிக்கிய கார்! வெளியான சிசிடிவி காட்சி | salem

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"உயிருடன் எரித்தனர்.. கற்பனை கூட பண்ண முடில" குஜராத் கலவரம் குறித்து பிரதமர் மோடி உருக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
'ரூ' பயன்படுத்தியது ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்!
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
BJP Vs DMK: திமுக எங்களுக்கு எதிரிதான்... விஜய், சீமானுக்கு அழைப்பு விடுத்த பாஜக... எதற்கு தெரியுமா?
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
பிளஸ் 2 போதும், மொபைல் ஆப் டெவலப்பர் ஆகலாம்.. இலவச பயிற்சி; மாதம் ரூ.45,000 ஊதியம் - தமிழக அரசு அறிவிப்பு
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
OPS: ஈகோவை விடணும்.. செங்கோட்டையன் யார் தெரியுமா? ஓபிஎஸ் சொன்ன பதில்
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
Kerala : போதை பொருள் கடத்தல்.. நீதிபதியின் மகன் கைது..! கேரள போலீசார் அதிரடி..
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்!  திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
TVK Vijay: வெற்று விளம்பர மாடல்.. திமிங்கிலங்களே சிக்கும்.. டாஸ்மாக் ஊழல்! திமுகவை வெளுத்து வாங்கிய விஜய்
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Crime: மதுரைக்கு வந்த 8 கிலோ கஞ்சா.. கைது செய்யப்பட்ட சிறுவனுக்கு பின்னால் போதை கும்பல் ?
Embed widget