மேலும் அறிய

திருவாரூரில் தொடர் கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது.திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 26ஆம் தேதி தொடங்கியதில் இருந்து டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது குறிப்பாக கடந்த 10 தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் மழை விட்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதல் இடைவிடாமல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. மேலும் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் கடலோர மாவட்டங்களான புதுச்சேரி காரைக்கால் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நவம்பர் 8ஆம் தேதி கடலோர மாவட்டங்களில்  இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர பகுதிகளுக்கு மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோ மீட்டர் வரை காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்றைய இரவு தொடங்கிய மழை தற்போது வரை இடைவிடாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.

திருவாரூரில் தொடர் கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த நிலையில் கனமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும் மழை நீரை வடிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில்  திருவாரூரில் 15.6 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 11.6 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில்  34.0 மில்லி மீட்டரும், குடவாசலில் 5.0 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 7.8 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 9.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 1.4 மில்லி மீட்டரும் பாண்டவையாறு தலைப்பில் 14.4 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகியுள்ளது.

திருவாரூரில் தொடர் கனமழை எதிரொலி - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
மேலும் தொடர் கனமழையின் காரணமாக நீடாமங்கலம், கோட்டூர், மன்னார்குடி உள்ளிட்ட கிராமங்களில்  அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். 30 முதல் 50 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.   வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும் எனவும் மழை நீரை வடியவிட்டு அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
 
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் நகர் பகுதியின் பல்வேறு இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதேபோன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில்  வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
ABP Premium

வீடியோ

மூர்த்தியுடன் ரகசிய DEAL? தவெக மா.செ மீது புகார்! சொந்த கட்சியினரே போர்க்கொடி
Sleeping Man falls from 10th Floor|10 வது மாடியில் இருந்துதவறி விழுந்த முதியவர் | Surat
DMDK DMK Alliance | திமுக கொடுத்த OFFER!ரூட்டை மாற்றும் பிரேமலதா! தேமுதிக கூட்டணி ப்ளான்
TVK Ajitha ICU| ’’நான் திமுக கைக்கூலியா?’’ICU-வில் தவெக அஜிதா! தவெகவில் நடப்பது என்ன?
Priyanka Gandhi to lead Congress | ராகுல் தலைமைக்கு ENDCARD?பவருக்கு வரும் பிரியங்கா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN BJP : ‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க முடியாமல் திணறும் பாஜக..!
‘மதில் மேல் பூனையாக கட்சிகள்’ கூட்டணியை பெரிதாக்க திணறும் பாஜக..!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
Jana Nayagan Audio Launch: டைம் நோட் பண்ணுங்க.. ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா நேரம் இதுதான்!
GK Mani removed from PMK: பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.! ராமதாசுக்கு காலையிலேயே ஷாக் கொடுத்த அன்புமணி
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Rohit Kohli: சொதப்பிய ரோகித்.. அசத்திய கோலி - பிசிசிஐ நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் கிரிக்கெட் ரசிகர்கள்
Renault Duster 2026: மொத்தமாக மாறிய டிசைன், ஸ்டைலிஷ் லுக், ப்ரீமியம் அம்சங்கள் - ரெனால்ட் டஸ்டர் டீசர் - ஜன.26 லாஞ்ச்
Renault Duster 2026: மொத்தமாக மாறிய டிசைன், ஸ்டைலிஷ் லுக், ப்ரீமியம் அம்சங்கள் - ரெனால்ட் டஸ்டர் டீசர் - ஜன.26 லாஞ்ச்
Bangladesh Unrest: வங்கதேசத்தில் ஓயாத கலவரம் - மிகவும் விலையுயர்ந்த நகரம் எது? நிலத்தின் மதிப்பு என்ன?
Bangladesh Unrest: வங்கதேசத்தில் ஓயாத கலவரம் - மிகவும் விலையுயர்ந்த நகரம் எது? நிலத்தின் மதிப்பு என்ன?
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
Southern District Trains: தென்மாவட்ட மக்களே..! ஜன. 1 முதல் நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில் நேரம் மாற்றம்
இந்த முறையாவது உரையாற்றுவாரா ஆளுநர் ரவி.! சட்டசபை கூட்டத்திற்கு தேதி குறித்த தமிழக அரசு
இந்த முறையாவது உரையாற்றுவாரா ஆளுநர் ரவி.! சட்டசபை கூட்டத்திற்கு தேதி குறித்த தமிழக அரசு
Embed widget