மேலும் அறிய

திருவாரூர்: இன்று 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - விவரம்!

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று  பாதித்தவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு முக்கியமான காரணம் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து ஊரடங்கு நீடிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என தமிழ்நாடு அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வந்தது. அதனை அடுத்து ஒரு சில மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தரவுகளுடன் கூடிய ஊரடங்கு நீடித்திருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் தளர்வுகள் அதிகரித்து ஊரடங்கை வருகிற 5ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
 
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 60 நபர்களுக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மற்றும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், குடவாசல் அரசு மருத்துவமனை, நன்னிலம் அரசு மருத்துவமனை, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை, மன்னார்குடி அரசு மருத்துவமனை, உள்ளிட்ட இடங்களில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 671 நபர்கள் அரசு மருத்துவமனை, மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும், சிலர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இன்று ஒரே நாளில் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் 320 நபர்கள் இதுவரை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர்: இன்று 60 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி - விவரம்!
மேலும் இன்று ஒரே நாளில் 73 நபர்கள் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரத்தில் வீட்டில் அவர்கள் மேலும் 15 தினங்களுக்கு தனிமையில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தொடர்ந்து திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் இதுவரை மாவட்டம் முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரம் நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும், மேலும் மாவட்டத்தில் உள்ள மக்கள் தற்போது அளித்து வரும் ஒத்துழைப்பை தொடர்ந்து நீடித்தால், திருவாரூர் மாவட்டம் தொற்று இல்லாத மாவட்டமாக உருவாகும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
 
 
 
 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

பூதலூர் தாலுகாவில் துருப்பிடித்து வீணாகும் கைப்பம்புகள்... சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
பூதலூர் தாலுகாவில் துருப்பிடித்து வீணாகும் கைப்பம்புகள்... சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை
போதைக்கு எதிராக தஞ்சையில் 3 கி.மீ. தூரம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
போதைக்கு எதிராக தஞ்சையில் 3 கி.மீ. தூரம் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
அலாரம் வயரை அறுத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: பூதலூரில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரம்
அலாரம் வயரை அறுத்து ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: பூதலூரில் நள்ளிரவில் அரங்கேறிய துணிகரம்
பணிக்கு புறப்பட்டபோது பெண் ஏட்டுக்கு நேர்ந்த விபரீதம்... சோகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்
பணிக்கு புறப்பட்டபோது பெண் ஏட்டுக்கு நேர்ந்த விபரீதம்... சோகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
Rasi Palan: தொட்டதெல்லாம் பொன்னாகும் நாள்! மேஷம் முதல் மீனம் வரை.. இன்று உங்க ராசிக்கு எப்படி இருக்கு?
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வங்கக்கடலில் உருவாகும் அடுத்த புயல்?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
CM Vijay: செய்தியை கேட்டதும் கலங்கிய முதல்வர் விஜய்! ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவிப்பு! நடந்தது என்ன?
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Mars Transit: செவ்வாய் பெயர்ச்சி.. டிசம்பர் 19 முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவைதான்!
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
Magalir Urimai Thogai: தீபாவளிக்கு முன் மகளிர் உரிமைத் தொகை? நாளை வங்கி கணக்கில் வரவு?
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
திருவண்ணாமலை தீபத் திருவிழாவுக்கு போக போறீங்களா? பக்தர்களுக்காக என்னென்ன ஏற்பாடுகள்... இதோ லிஸ்ட்!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தமிழக உயரதிகாரி ஒருவரின் தலையீடு! பள்ளிக்கரணை விவகாரத்தில் அன்புமணி வெடித்த குற்றச்சாட்டு!
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
தீபாவளி அன்று சென்னையில் மழை பெய்யுமா? 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அப்டேட்
Embed widget