மேலும் அறிய
தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு
தகவல் அறிந்து விரைந்து வந்து செயல்பட்டு சித்திரை வேலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
![தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு thanjavur: worker went inside sand during construction of drainage rescued தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/9d6f7c638435c452149bcb41b334bd2b1659422031_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு
தஞ்சாவூர் அருகே கழிவுநீர் தொட்டிக்காக பள்ளம் தோன்றிய போது மண் சரிந்து 15 அடி ஆழத்தில் சிக்கிய தொழிலாளியை பத்திரமாக தீயணைப்பு வீரர்கள் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைந்து செயல்பட்டு தொழிலாளியை மீட்டதற்காக தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி ஒன்றரை மணி நேரத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அருகே சின்னமனை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன். இவரது வீட்டில் கழிவு நீர் தொட்டிக்காக சிமெண்ட் உறைகளை இறக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை 15 அடி ஆழத்திற்காக மண் தோண்டப்பட்டது. மண் தோண்டும் பணியில் பேராவூரணி பூக்கொல்லையைச் சேர்ந்த சித்திரவேல் (45) மற்றும் நான்கு பேர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 15 அடி ஆழம் மண் தோண்டியபோது, சித்திரவேல் குழிக்குள் இருந்து மண்ணை வெளியே எடுத்து கூடை மூலம் மேலே அனுப்பிக் கொண்டிருந்தார். பள்ளம் வெட்டிய மண் அருகிலேயே மேற்புறத்தில் கொட்டப்பட்டு இருந்தது. திடீரென மேலே இருந்த மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் சித்திரவேல் மண்ணுக்குள் புதைந்தார்.
![தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/21df43f00bf528e95e6a8b57cae3c4fc1659422141_original.jpg)
உடனடியாக அங்கு வேலை பார்த்த மற்ற தொழிலாளர்கள் சித்திரவேல் மீது இருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதே நேரத்தில் பேராவூரணி தீயணைப்பு படைவீரர்களுக்கும் தகவல் அளித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் வீரர்கள் ஏ.சுப்பையன், கே.நீலகண்டன், எம்.ரஜினி, ஆர்.ராஜூவ்காந்தி, அ.மகேந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தகவல் அறிந்து தற்போதைய சேர்ந்த பொதுமக்களும் திரண்டு வந்து பதட்டமான மனநிலையுடன் தொழிலாளியை மீட்க வேண்டும் என வேண்டிக் கொண்டே நின்றிருந்தனர். மண்ணுக்குள் சிக்கிக் கொண்ட சித்திரைவேலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பின் சித்திரவேல் உயிருடன் மீட்கப்பட்டார். உடன் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவரை பேராவூரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
![தஞ்சாவூர்: 15 அடி ஆழத்தில் மண்ணில் புதைந்த தொழிலாளி உயிருடன் மீட்பு - தீயணைப்பு வீரர்களுக்கு பாராட்டு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/02/316b371d33a3503f429ccb22b00254da1659422292_original.jpg)
மீட்கப்பட்ட சித்திரவேலுக்கு மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். சித்திரவேலை பெரும் போராட்டத்துக்கு பின் உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களை பொதுமக்கள் பலரும் பாராட்டினர். இந்த சம்பவம் தஞ்சை மாவட்டம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து விரைந்து வந்து செயல்பட்டு சித்திரை வேலை உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை வீரர்களுக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion