Jallikattu 2025 : அடங்க மறுக்கும் காளைகள்.. அடக்கும் காளையர்கள்! தொடங்கியது மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு
Jallikattu 2025 : தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது

தஞ்சாவூர்: தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. இதை தஞ்சாவூர் எம்எல்ஏ டி கே ஜி நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் உறுதிமொழி வாசித்து தொடக்கி வைத்தனர்.
மாதாக்கோட்டை ஜல்லிக்கட்டு:
ஆண்டுதோறும் தஞ்சை அருகே மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று மாதாக்கோட்டையில் ஜல்லிக்கட்டு போட்டியை தஞ்சாவூர் எம் எல் ஏ டிகேஜி நீலமேகம், கோட்டாட்சியர் இலக்கியா ஆகியோர் வாசித்து தொடக்கி வைத்தனர். இதை விழா குழு தலைவர் சௌரிராஜ், செயலாளர் ஸ்டாலின் செல்வராஜ், பொருளாளர் சூசைராஜ், வல்லம் டிஎஸ்பி கணேஷ்குமார் ஆகியோரும் உறுதி மொழி வாசிக்க மாடுபிடி வீரர்களும் திருப்பி வாசித்தனர்.
இதையும் படிங்க: Budget 2025: மத்திய பட்ஜெட் - 140+ கோடி இந்தியர்கள், 43+கோடி நடுத்தர மக்கள் - டாப் 5 எதிர்பார்ப்புகள் என்ன?
தொடா்ந்து, வாடிவாசலில் இருந்து தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, அரியலூா், பெரம்பலூா் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த 657 காளைகள் ஒவ்வொன்றாகத் திறந்து விடப்பட்டன. காளைகளைப் பிடிக்க மொத்தம் 358 போ் அனுமதிக்கப்படவுள்ளனர். இவா்கள் 5 பிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவாகக் களமிறக்கப்படவுள்ளனர். மாடு பிடிக்கும் போது வீரா்கள் தடுமாறி கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் வாடிவாசலிலிருந்து சுமாா் 100 மீட்டா் தொலைவுக்குத் தேங்காய் நாா் போடப்பட்டு உள்ளது.
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு சைக்கிள், டைனிங் டேபிள், சில்வா் அண்டா ஆதியவை பரிசுகளாக வழங்கப்பட்டன. இதேபோல் பிடிப்படாத மாடுகளுக்கான பரிசுகள் மாட்டின் உரிமையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன.
இதையும் படிங்க: Budget 2025 LIVE: நாடே எதிர்பார்ப்பு! இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் - சாமானியனுக்கு சந்தோஷமா?
மருத்துவ பரிசோதனை:
முன்னதாக, மாடு பிடி வீரா்களைச் சுகாதாரத் துறையைச் சோ்ந்த மருத்துவக் குழுவினா் உடல் நலம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, அதன் பிறகு தகுதியானவா்கள் மட்டுமே களத்துக்குள் செல்ல அனுமதித்தனா். இதேபோல, மாடுகளை கால்நடைப் பராமரிப்புத் துறையினா் பரிசோதனை செய்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட எஸ்.பி., ராஜாராமன் உத்தரவின் பேரில் வல்லம் டி.எஸ்.பி., கணேஷ் குமார் தலைமையில் 400க்கும் அதிகமான போலீசார் மேற்கொண்டுள்ளனர்.






















