Group 2 Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுகளுக்கு சிறப்புப் பயிற்சி- வெளியான அழைப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Group 2 Free Coaching: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் 28.09.2025 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டன.

சென்னை, கிண்டி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 தொகுதி 2, 2 ஏ முதன்மை தேர்வுக்கான மாதிரி தேர்வு மற்றும் திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் 28.09.2025 அன்று நடத்தப்பட்டு முடிவுகள் 22.12.2025 அன்று வெளியிடப்பட்டன. அதனைத் தொடர்ந்து குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகள் 08.02.2026 மற்றும் 22.02.2026 அன்று நடைபெற உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கான மாதிரித் தேர்வுகள் மற்றும் திருப்புதல் வகுப்புகள் 05.01.2026 முதல் 06.02.2026 வரை கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளன. இம்மாதிரித் தேர்வுகளில் சேர விருப்பம் உள்ளவர்கள் கூகுள் படிவத்தில் தங்கள் https://forms.gle/d8jkeBkrqXAZe14K7 விவரங்களைப் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு சென்னை, கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை அலுவலக வேலை நாட்களில் (காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) நேரில் அணுகலாம் அல்லது decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொண்டும் விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மிஸ் பண்ணிடாதீங்க..!
எனவே, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வுகளில் கலந்துகொள்ளவுள்ள போட்டித் தேர்வர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.






















