டெல்லி vs இரயில்வேஸ், 2024-25 ரஞ்சி கோப்பைக்கான இரண்டாவது நாள் போட்டி இன்று நடைபெற்றது.
13 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி கோப்பையில் கோலி விளையாடிய முதல் போட்டி இதுவாகும்.
போட்டியை காண வந்த பெரும்பான்மையான ரசிகர்கள் விராட் கோலியின் ஆட்டத்தைப் பார்க்கவே வந்திருந்தனர்.
இந்நிலையில், விராட் கோலி 15 பந்துகளுக்கு 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் குவிந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு, ஆட்டத்தைப் பார்க்க வந்திருந்த ரசிகர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் மைதானம் வெறுமையாகக் காட்சியளித்தது.