மேலும் அறிய

டெல்டா மாவட்டங்களில், தூர்வாரும் பணிகளை இன்றும் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை இரண்டாவது நாளாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் வழித்தடங்கள் துார்வாரும் பணியை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருச்சியில் தொடங்கி இன்று இரண்டு நாட்களாக ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி, தஞ்சை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட  அதனைத் அவர்கள் இன்று நாகை, மயிலாடுதுறை பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார்.

டெல்டா மாவட்டங்களில், தூர்வாரும் பணிகளை இன்றும் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

இந்தாண்டிற்கான குறுவை பருவ நெல் சாகுபடி  டெல்டா மாவட்டங்களில் துவங்கி உள்ளது. இதற்காக, முன்பு எப்போதும் இல்லாத நிகழ்வாக கடந்த 24 -ம் தேதி, குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், கடைமடை பகுதிகள் வரை தண்ணீர் செல்வதற்காக, 80 கோடி ரூபாயில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளும் நடந்து வருகின்றன. இதுவரை 4,000 கி.மீ., தூர்வாரப்பட்டு உள்ளது. மேலும், 900 கி.மீ க்கு மேல் தூர்வார வேண்டி உள்ளது. அதேபோல, காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர்,  ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் நிறைவுடையும் நிலையிலும் உள்ளன.

டெல்டா மாவட்டங்களில், தூர்வாரும் பணிகளை இன்றும் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக முதல்வரின் சிறப்பு தூர்வாரும் பணி 2022-ன் கீழ் காவிரி ஆறு, மகிமலையாறு, மஞ்சளாறு, வீரசோழனாறு, நன்டலாறு, மண்ணியாறு, புது மண்ணியாறு, அய்யாவையனாறு, விக்ரமனாறு, பாலாறு மற்றும்  தெற்குராஜன் ஆறுகளில் பிரியும் வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள்  தூர்வாரும் பணிகள் கடந்த மாதம் ஏப்ரல் 24- ஆம் தேதி தொடங்கப்பட்டது.   இதன் மூலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் 8.70 கோடி மதிப்பீட்டில் 862.25 கிலோ மீட்டர் தூரம் 49 தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு ஏப்ரல் மாதத்திலேயே தூர்வாரும் பணிகள் துவங்கப்பட உள்ளதாகவும், தூர்வாரும் பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் விவசாயிகள்  அடங்கிய 49 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்திருந்தார். மேலும், விடுபட்ட தூர்வாரும் பணிகளை விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து பணிகளில் சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் கூறினார். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற

அந்த வகையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற தூர்வாரும் பணிகள் அனைத்தும் நேற்று முன்தினம் நூறு சதவிதம் நிறைவு பெற்றது. மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 2.5 கோடி மதிப்பீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளும் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் வருவதற்குள் நிறைவு பெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் உள்ள ராமச்சந்திரன் வாய்க்காலில் நடைபெற்ற தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தொடர்ந்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அங்கிருந்து புறப்பட்டு  திருச்சி ஏர்போர்ட்டுக்கு சென்றடையும் ஸ்டாலின், அங்கு செய்தியாளர்களை சந்தித்துவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget