மயிலாடுதுறை: நாளுக்கு நாள் துர்நாற்றம் எடுக்கும் சீர்காழி (நகரம்) நகராட்சி
சீர்காழி நகராட்சி கிடங்கில் குப்பையை கொட்ட விடாமல் வீதிகளில் எங்காவது கொட்டிவர செல்லும் அதிகாரிகளை கண்டித்து தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி உட்பட்ட பகுதிகளில் 24 வார்டுகள் உள்ளன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் நகராட்சி ஆணையர் 24 வார்டுகளையும் கவனித்து வந்தார். இதனால் அந்தந்த பகுதிகளில் மின்விளக்கு, சாலை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெறுவதில் சிரமம் நீடித்தது. இந்நிலையில், மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று ஒவ்வொரு வார்டுகளுக்கும் தனி வார்டு உறுப்பினர், நகர மன்ற தலைவர் மக்களால் தேர்ந்தெடுக்கபட்டனர். இதன் மூலம் சீர்காழி நகரம் சீர் பெற்று விடும் என்ற நம்பிக்கையில் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், மக்களின் எதிர்பார்ப்பு தற்போது உள்ள நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையர் உள்ளிட்டவர்களின் செயல்பாட்டால், ஏமாற்றத்தை மட்டுமே ஏற்படுத்தியுள்ளது என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றன. இதற்கு உதாரணமாக சீர்காழி நகர் முழுவதும் குப்பைகள் சரிவர அல்ல படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கிறது. மின்விளக்குகள் சரியான முறையில் எறியப்படாமலும், கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாடப்படாமல் கழிவு நீர்கள் சாலையில் வழிந்து ஓடும் அவல நிலையும் காணமுடிகிறது. சீர்மிகு சீர்காழி என்ற பெயர் பெற்ற இவ்வூர், தற்போது சுகாதார சீர்கேட்டால் சீரழிந்து காணப்படுகிறது என்றால் அது மிகையாகாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர் .
எல்லாவற்றுக்கும் மேலாக சீர்காழி நகராட்சி உட்பட்ட வார்டுகளில் உள்ள குப்பைகளை காலை, மாலை என இருவேளையும் துப்புரவு பணியாளர்கள் தூய்மை செய்து வருகின்றனர். அவ்வாறு வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை நகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டுவதும், அவற்றை அங்கு தரம் பிரித்து விற்பனை செய்வதும் வழக்கம். ஆனால, தற்போது புதிதாக சீர்காழி நகராட்சியில் பொறுப்பேற்றுள்ள ஆணையர், தூய்மை பணியாளர்கள் வீடுகளில் சேகரிக்கும் குப்பைகளை நகராட்சி குப்பை கிடங்கில் கொட்ட விடாமல், குப்பைகளை வீதிகளில் போட்டு தரம் பிரித்து, மட்கா குப்பைகள் மட்டும் எடுத்து வர சொல்லி, அவற்றை மறு சுழற்சி செய்து விற்பனை செய்வதாகவும்,
மட்கும் குப்பைகளை தெருகளை கொட்டி விட்டு வர சொல்வதாகவும், இதனால் குப்பைகளை தெருவில் போட்டுவிட்டு வருவதால் துருநாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டு, தெருவில் வசிக்கும் மக்களுக்கு நோய் தொற்றும், குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருகிறது என கூறி தூய்மை பணியாளர்களிடம் பொதுமக்கள் வாக்குவாதம் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தூய்மை பணியாளர்கள் ஆத்திரமடைந்து, சீர்காழி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நகராட்சி அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த சீர்காழி காவல்துறையினர் மற்றும் நகராட்சி ஆணையர் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மீண்டும் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பை கிடங்கில் அனுமதி அளிப்பதாக தெரிவித்ததின் பெயரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் பொதுமக்கள் கூறுகையில், சீர்காழி நகராட்சி நிர்வாகம் வரி வசூல் செய்வதில் மட்டுமே குறிக்கோளாக செயல்படுகிறது என்றும், மக்கள் வரிப்பணத்தை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு செய்ய வேண்டிய எந்த ஒரு அடிப்படை வசதிகளையும் செய்வதில்லை என குற்றச்சாட்டை தெரிவிக்கின்றன.