புதுச்சேரியில் மின் கட்டண உயர்வுக்கு எதிராக SDPI கட்சி ஆர்ப்பாட்டம்
’’காரைக்காலில் பேருந்து நிலையம் அருகே மாநில செயலாளர் தமீம் கனி தலைமையில் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கம்’’


எனவே புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டண உயர்வை அமல்படுத்த கூடாது என வலியுறுத்தியும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக இயங்கி வரும் பாஜக- என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசை கண்டித்தும் புதுச்சேரி மாநிலத்தில் எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் பேருந்து நிலையம் அருகே மாநில செயலாளர் தமீம் கனி தலைமையில் புதுச்சேரி அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பிய அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் அடுத்த கட்டமாக புதுச்சேரி மாநில மக்களை ஒருங்கிணைத்து புதுச்சேரி சட்டமன்றத்தை நோக்கி பேரணியாக சென்று முற்றுகையிட இருப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியினர் எச்சரித்துள்ளனர்.

