மேலும் அறிய

தஞ்சாவூரில் செவிலியர்கள் போராட்டம் - வீடுகள் தேடி தடுப்பூசி போடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

’’காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பணி செய்ய சொல்லி கட்டாயப்படுத்தப்படுவதால் சுகாதார செவிலியர்கள் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாவதாக புகார்’’

வீடு தேடி சென்று கொரொனா தடுப்பூசி போடும் பணியில் ஏற்படும் சிரமங்கள் உட்பட பல கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர் சங்கம் சார்பில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொரோனா தடுப்பூசி பணிக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதால் சுகாதார செவிலியர்கள் அனைவரும் மன உளைச்சலில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பணி நேரத்தை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை என்று மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.  வேலை நாட்களில் சிறிது நேரம் ஒய்வு வழங்க வேண்டும், இலக்கினை எட்டும் வகையில் ஊழியர்களை அலைகழிப்பதை நிறுத்த வேண்டும். கூடுதல் ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும். பெண் ஊழியர்களுக்கு ஏற்படும் சிரமங்களை கண்டறிந்து நிவர்த்தி செய்திட வேண்டும்.

தஞ்சாவூரில் செவிலியர்கள் போராட்டம் - வீடுகள் தேடி தடுப்பூசி போடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

தடுப்பூசி முகாம் பணிக்கு வாகன வசதி ஏற்பாடு செய்து தரவேண்டும் அல்லது தனியார் வாகன வசதிக்கு உரிய தொகை வழங்க வேண்டும்.  பல்வேறு பகுதிகளில் நடந்து செல்வதால், உடல் நலிவுற்ற ஊழியர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தடுப்பூசி போடும்போது சமூக விரோதிகள் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்குதலுக்கு வருவதை தடுத்திட காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும், தடுப்பூசி பணியில் அரசியல்வாதிகள் தலையீடு மற்றும் மிரட்டுவதை முற்றிலும் தடுக்கப்பட வேண்டும். மருத்துவ வழிகாட்டுதலுக்கு மாறாக நடைபெறும் வீடு தேடிச்சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை கைவிட வேண்டும். தடுப்பூசி பணி தொடர்பான கணக்கெடுப்பு பணியை செய்ய சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும். நோய் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சுகாதார செவிலியர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க ஆவன செய்ய வேண்டும் என்பன  உள்ளிட்ட  பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சாவூரில் செவிலியர்கள் போராட்டம் - வீடுகள் தேடி தடுப்பூசி போடும் திட்டத்திற்கு எதிர்ப்பு

இதில் மாவட்ட தலைவர் ஜெயராணி, செயலாளர் சீதாலட்சுமி, பொருளாளர்  திலகவதி, துணைத் தலைவர்கள் சிவபாக்கியம், ஜெயலட்சுமி, எழிலரசி, ஜெயந்தி, இணைச் செயலாளர்கள் பத்மபிரியா, சிவகாமி, தமிழ்ச்செல்வி, சாந்தி, கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி, மாவட்ட தணிக்கையாளர் தமிழ்செல்வி மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பொது சுகாதார அலுவலர் சங்க மாவட்ட முன்னாள் செயலாளர் சிங்காரவேல் கலந்து கொண்டார். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Lakshmi Menon Issue | தலைக்கேறிய போதை IT ஊழியரை கடத்தி அட்டாக் தலைமறைவான லட்சுமி மேனன் | Kochi
EPS Thangamani : பிரச்சாரத்திற்கு வந்த தங்கமணி சிக்ஸர் அடிக்கும் எடப்பாடி சர்ச்சைகளுக்கு ENDCARD!
ஜெகதீப் தன்கர் எங்கே போனார்?ஒரு மாதத்தில் கிடைத்த முதல் தகவல் வெளிவந்த ரகசியம்..! | Jagdeep Dhankhar
”TARGET திமுக கூட்டணி”விஜய்-ன் அதிரடி அறிவிப்புகள்? சம்பவம் செய்யுமா தவெக மாநாடு? | TVK Vijay Speech
CM-ஐ கன்னத்தில் அறைந்த நபர் முடியை இழுத்து தாக்குதல் டெல்லியில் நடந்தது என்ன? | Rekha Gupta Attacked

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
அமெரிக்க வர்த்தகப் போர்: வேலை இழப்பு, தொழில் வீழ்ச்சி.. அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை! அரசு என்ன செய்ய வேண்டும்?
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; யாரெல்லாம் தேர்ச்சி? முதன்மைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
GATE Exam 2025: தொடங்கிய பொறியியல் கேட் தேர்வு விண்ணப்பப் பதிவு; முக்கிய நாட்கள், கட்டணம், பாடத்திட்டம்!!
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
US Gun Shot: ”இந்தியா மீது அணுகுண்டு, ட்ரம்பை கொல்லனும், இஸ்ரேல் எரியனும்” - பதைபதைக்க செய்யும் வீடியோ
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஆகஸ்ட் 29-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
சென்னை மக்களே.! ஆகஸ்ட் 29-ம் தேதி எங்கெங்க மின்சார துண்டிப்பு செய்யப் போறாங்கன்னு தெரியுமா.?
TVS Orbiter e- Scooter: க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் - மிரட்டலான டிசைன், ரேஞ்ச், 6 கலர்கள் - விலை
TVS Orbiter e- Scooter: க்ரூஸ் கண்ட்ரோல் வசதியுடன் டிவிஎஸ் ஆர்பிட்டர் - மிரட்டலான டிசைன், ரேஞ்ச், 6 கலர்கள் - விலை
AI Job Cuts: ஏஐ மூலம் இவர்களுக்குத்தான் அதிக வேலை இழப்பு; அதிர்ச்சி தரும் ஸ்டான்ஃபோர்டு ஆய்வு முடிவுகள்!
AI Job Cuts: ஏஐ மூலம் இவர்களுக்குத்தான் அதிக வேலை இழப்பு; அதிர்ச்சி தரும் ஸ்டான்ஃபோர்டு ஆய்வு முடிவுகள்!
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் அதிர்ச்சி! ரூ.3000 கோடி இழப்பு: முதல்வர் ஸ்டாலின் அவசர கோரிக்கை!
அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூர் அதிர்ச்சி! ரூ.3000 கோடி இழப்பு: முதல்வர் ஸ்டாலின் அவசர கோரிக்கை!
Embed widget