![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பல்லக்கில் சென்ற திருவாவடுதுறை ஆதீனம் - எதிர்ப்பு தெரிவித்து போராடிய திராவிடர் கழகத்தினர் கைது
திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய திராவிடர் கழகத்தினர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனத்தில் பட்டணப் பிரவேசம் நடைப்பெற்றது
![பல்லக்கில் சென்ற திருவாவடுதுறை ஆதீனம் - எதிர்ப்பு தெரிவித்து போராடிய திராவிடர் கழகத்தினர் கைது Mayiladuthurai: Thiruvaduthurai Aadeenam who went to Pallak - Dravidar kazhagam members arrested for protesting பல்லக்கில் சென்ற திருவாவடுதுறை ஆதீனம் - எதிர்ப்பு தெரிவித்து போராடிய திராவிடர் கழகத்தினர் கைது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/7cc624919c91d60d14eac83db6656896_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகில் உள்ளது திருவாவடுதுறை ஆதீனம். திருவாவடுதுறை ஆதீனத்தை 14 ஆம் நூற்றாண்டில் தோற்றுவித்த ஆதீன குருமுதல்வர் நமசிவாய மூர்த்தி சுவாமிகளின் குருபூஜை ஆண்டு தோறும் தை மாதத்தில் நமசிவாயமூர்த்திகள் மகரத்தலை நாள் குருபூஜை என 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு குருபூஜை கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிரசித்திபெற்ற ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!பிரசித்திபெற்ற ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
பத்தாம் நாளான நேற்று, குருபூஜை விழா, மற்றும் மாகேஸ்வர பூஜை ஆகியன நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவாடுதுறை ஆதீனத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் நிகழ்வு நடைபெறும்.
இந்நிலையில் இரவு பட்டணப் பிரவேசம் நடத்த திராவிடர் கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நவீன யுகத்தில் பட்டணப்பிரவேசம் என்ற பெயரில் மனிதனை மனிதன் சுமக்கும் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று கூறி, திருவாவடுதுறை ஆதீன நுழைவு வாயிலின் முன்பு திராவிடர் கழக மாநில பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை தமிழ் புலிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழர் வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் தலைமையிலான காவல்துறையினர் கலைந்து போகச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தினர். அதற்கு, திராவிடர் கழகத்தினர் உடன்படாததால், அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, ஆதீனத் திருமடத்தில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் ஸ்ரீ கோமுக்தீஸ்வர சுவாமி திருக்கோயிலில் தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து, ஸ்ரீ நமசிவாய மூர்த்திகள் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் குருமகா சந்நிதானம் சிவிகாரோஹணம் செய்தருளி பட்டிணப்பிரவேசம் எழுந்தருளினார். இதில், சூரியனார்கோயில் கோயில் ஆதீனம் 28 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)