பிரசித்திபெற்ற ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!
கொள்ளிடம் அருகே ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சந்தபடுகை கிராமத்தில் அமைந்துள்ளது பழைமையான, மிகவும் பிரசித்தி பெற்றது ஸ்ரீ சாந்த முத்து மாரியம்மன் ஆலயம். இவ்வாலயத்தில் ஸ்ரீ சந்தான கணபதி, வள்ளி, தெய்வானை உடனாகிய ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ குட்டடியாண்டவர் உள்ளிட்ட 5 தெய்வங்கள் இப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் கடவுளாக அருள்பாலித்து வருகின்றனர்.
Local Body Election | தரங்கம்பாடி பேரூராட்சியில் 2 அதிமுக வேட்பாளர் உட்பட 3 பேர் போட்டியின்றி தேர்வு
இந்நிலையில் ஆகம விதிப்படி கோயில்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாவை நடத்த கிராம மக்கள் முடிவெடுத்து, கிராம மக்கள் பங்களிப்புடன், கோயில் குடமுழுக்கு பணிகளை தொடங்கினர். அதனைத் தொடர்ந்து கோயில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்தை அடுத்து கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி கணபதி ஹோமத்துடன், முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நான்காம் கால யாகசாலை பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது.
தஞ்சை பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தல்கால் முகூர்த்தம்
தொடர்ந்து மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன. பின்னர் வேத விற்பன்னர்கள் வேதமந்திரங்கள் ஓத கிராம முக்கியஸ்தர்கள் பலர் கலந்துகொள்ள, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. கும்பாபிஷேக விழாவில் காண மயிலாடுதுறை மாவட்ட மக்கள் இன்றி சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Neet Special Assembly | ஆளுநரை தனிப்பட்ட ரீதியில் விமர்சிக்க கூடாது - உத்தரவிட்ட சபாநாயகர் அப்பாவு
கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கொரோனா வைரஸ் தொற்று வழிகாட்டுதலை பின்பற்றி சாந்தபடுகை கிராம மக்கள் செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆணைக்காரன் சத்திரம் காவல்துறையினர் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து இன்று முதல் நாற்பத்தி எட்டு தினங்களுக்கு மண்டல பூஜை இவ்வாலயத்தில் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாத பக்தர்கள் இந்த மண்டல பூஜையில் கலந்து கொண்டால் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கைகளில் ஒன்றாகும்.