T20 World Cup 2022: குறையாத மவுசு, வெறியான ரசிகர்கள்... 5 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த போட்டி டிக்கெட்டுகள்
இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
![T20 World Cup 2022: குறையாத மவுசு, வெறியான ரசிகர்கள்... 5 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த போட்டி டிக்கெட்டுகள் T20 World Cup 2022: india pakistan match tickets sold out in five minutes of opening T20 World Cup 2022: குறையாத மவுசு, வெறியான ரசிகர்கள்... 5 நிமிடத்தில் விற்றுத்தீர்ந்த போட்டி டிக்கெட்டுகள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/02/08/8c4036445a54c50767a4d9abce73b7c8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடர் வரும் அக்டோபர் மாதம் 16-ம் தேதி தொடங்கி நவம்பர் 13-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இம்முறை டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. அதனை அடுத்து டி20 உலகக் கோப்பை தொடருக்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி கடந்த உலகக் கோப்பை தொடரை போல் இம்முறையும் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்று அதிலிருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடருக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. அதன்படி அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையிலான போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. அதில் அக்டோபர் 23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் போட்டி மெல்பேர்னில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டிக்கான பொது டிக்கெட் முழுவதும் 5 நிமிடங்களில் விற்று தீர்ந்துள்ளது. வெறும் 5 நிமிடங்களில் சுமார் 60 ஆயிரம் டிக்கெட்கள் வரை விற்கப்பட்டுள்ளன.
சூப்பர் 12ல் இந்தியாவின் அட்டவணை:
23 அக்டோபர்: இந்தியா vs பாகிஸ்தான் (மெல்பேர்ன்)
27 அக்டோபர்: இந்தியா vs ஏ2(சிட்னி)
30 அக்டோபர்: இந்தியா vs தென்னாப்பிரிக்கா(பெர்த்)
2 நவம்பர்: இந்தியா vs பங்களாதேஷ்(பெர்த்)
6 நவம்பர்: இந்தியா vs பி 1 (மெல்பேர்ன்)
சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. அதன்பின்னர் தகுதி சுற்றில் ஏ பிரிவில் 2 ஆவது இடம் பிடிக்கும் அணி, தென்னாப்பிரிக்கா,பங்களாதேஷ் மற்றும் தகுதிச் சுற்றில் பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணிகளுடன் விளையாட உள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இரண்டு குரூப்களில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதி போட்டிகள் வரும் நவம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இறுதி போட்டி நவம்பர் 13-ம் தேதி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாடியது. அதேபோல் இம்முறையும் டி20 உலகக் கோப்பையில் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட உள்ளது. கடந்த முறை அடந்த தோல்விக்கு இம்முறை இந்தியா பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)