Honda Activa vs Yamaha Fascino 125..! இரண்டு ஸ்கூட்டரில் எது பெஸ்ட்? விலை, மைலேஜ் எவ்வளவு?
Honda Activa மற்றும் Yamaha Fascino 125 இந்த இரண்டு ஸ்கூட்டரில் எது சிறந்த ஸ்கூட்டர்? என்று கீழே விரிவாக காணலாம்.

இந்தியாவில் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஸ்கூட்டர்கள் உள்ளது. பல நிறுவனங்களும் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், Honda Activa மற்றும் Yamaha Fascino 125 ஆகிய இரண்டு ஸகூட்டர்களில் பெஸ்ட் ஸ்கூட்டர் எதுவென்று கீழே காணலாம்.
விலை:
Honda Activa ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் ரூபாய் 96 ஆயிரத்து 432 ஆகும். இதன் டாப் வேரியண்ட் விலை ரூபாய் 1.11 லட்சம் ஆகும். இதில் மொத்தம் 4 வேரியண்ட் ஆகும்.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரின் தொடக்க விலை ரூபாய் ரூபாய் 98 ஆயிரத்து 513 ஆகும். இதன் டாப் வேரியண்ட் ரூபாய் 1.20 லட்சம் ஆகும். இதில் மொத்தம் 9 வேரியண்ட்கள் உள்ளது.
எஞ்ஜின்:
Honda Activa ஸ்கூட்டரில் 109.52 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரம் ஆர்பிஎம் உள்ளது. 7.88 பிஎச்பி குதிரை ஆற்றல் கொண்டது. 9.05 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் 125 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 6 ஆயிரத்து 500 ஆர்பிஎம் திறன் கொண்டது. 8.04 பிஎச்பி குதிரைத் திறன் கொண்டது. 10.3 என்எம் டார்க் இழுதிறன் கொண்டது.
மைலேஜ்:
Honda Activa ஸ்கூட்டரில் அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம். 47 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் வரை செல்லலாம். லிட்டருக்கு 50 கிலோமீட்டர் வரை மைலேஜ் தருகிறது. பெட்ரோலில் ஓடும் ஆற்றல் கொண்டது.
ப்ரேக்:
Honda Activa ஸ்கூட்டரில் முன்பக்கம் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. ஸ்டீல் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் முன்பக்கம் ட்ரம், டிஸ்க் ப்ரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் ட்ரம் ப்ரேக் வசதி உள்ளது. அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளது. ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளது.
வாரண்டி:
Honda Activa ஸ்கூட்டரில் 5.3 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி பொருத்தப்பட்டுள்ளது. 1.3 லிட்டர் ரிசர்வ் திறனும் உள்ளது. 3 வருட வாரண்டி உள்ளது. 36 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி உள்ளது.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் 5.2 லிட்டர் பெட்ரோல் டேங்கர் வசதி உள்ளது. 2 வருட வாரண்டி உள்ளது. 24 ஆயிரம் கிலோமீட்டர் வாரண்டி உள்ளது.
சிறப்புகள்:
Honda Activa ஸ்கூட்டரில் கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி உள்ளது. சைலண்ட் ஸ்டார்ட் வசதி உள்ளது. ஹாலோஜன் எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 18 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 8 வண்ணங்களில் உள்ளது. பயனாளர்கள் 4 ஸ்டார் வசதி கொண்டுள்ளது.
Yamaha Fascino 125 ஸ்கூட்டரில் கிக் மற்றும் செல்ஃப் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஆட்டோமெட்டிக் ஸ்டார்ட் ஸ்டாப் வசதி உள்ளது. சைலண்ட் ஸ்டார்ட் வசதி கொண்டது. ஹாலோஜன் எல்இடி முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. 21 லிட்டர், 24.4 லிட்டர் டிக்கி வசதி கொண்டது. 19 வண்ணங்களில் இந்த வாகனம் உள்ளது. 3 ஸ்டார்கள் வசதி கொண்டது.






















