கலைஞர் கோட்டத்தை காண படையெடுத்த மயிலாடுதுறை பள்ளி மாணவர்கள்!
திருவாரூர் கலைஞர் கோட்டத்தை பார்வையிட மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் இரண்டு பேருந்துகள் மூலம் பள்ளி நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னாள் தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு திருவாரூரில் கலைஞர் கோட்டம் எழுப்பப்பட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த மாதம் திறக்கப்பட்டது. இதனை திருவாரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள், கல்லூரிகள், பள்ளிகளை சேர்ந்த மாணவர்களும் பேருந்து மூலம் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

அவ்வகையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் உள்ள சம்பந்தம் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 142 மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கலைஞர் கோட்டத்தை பார்வையிட ஏற்பாடு செய்திருந்தனர். அதற்காக இரண்டு தனியார் பேருந்துகள் மூலம் மாணவர்களை திருவாரூருக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பேருந்தினை மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா. முருகன் வழியனுப்பி வைத்தார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம் உள்ளிட்ட பலர் உடன் இருந்தார்கள்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற






















