மயிலாடுதுறையில் பிளாட்பார்ம் மாறி நின்ற ரயில்-சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் பணியிடை நீக்கம்
ரயில் புறப்பட்டு விடும் என்ற அச்சத்தில் அடித்து பிடித்து கொண்டு 1 வது நடை மேடையில் இருந்து 2 வது நடைமேடைக்கு முதியவர்கள் , குழந்தைகள் என பலரும் ரயில்வே பாலம் மீது ஏறி இறங்கினர்.
மயிலாடுதுறையில் நடைமேடை மாறி ரயில் நின்றதை தொடர்ந்து ரயில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அறிவிக்கப்பட்ட நடைமேடையில் ரயில் நிற்காமல் நடைமேடை மாற்றி நின்றதால் பயணிகள் அவதியடைவதாக ரயில் பயணிகள் சங்கத்தினர் அளித்த புகாரை தொடர்ந்து சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சித்தர்காடு அருகே மயிலாடுதுறை ரயில் நிலையம் அமைந்துள்ளது. இது ரயில்வே ஜங்ஷன் என்பதால் பல்வேறு மார்க்கங்களில் செல்லும் ஏராளமான ரயில்கள் நாள்தோறும் வந்து செல்கின்றது. இந்நிலையில் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில் வண்டிகளை நடைமேடையில் நிறுத்துவதில் ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதாக மயிலாடுதுறை ரயில் பயணிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 5.55 மணிக்கு 1 வது நடைமேடையில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பை நம்பி பயணிகள் 1 வது நடைமேடையில் காத்திருந்த நிலையில் 5.45 மணிக்கு 2 வது நடைமேடையில் மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றுள்ளது. இதனை கண்ட பயணிகள் ரயில் புறப்பட்டு விடும் என்ற அச்சத்தில் அடித்து பிடித்து கொண்டு 1 வது நடை மேடையில் இருந்து 2 வது நடைமேடைக்கு முதியவர்கள் , குழந்தைகள் என பலரும் ரயில்வே பாலம் மீது ஏறி இறங்கினர்.
Diwali Bonus: குரூப் பி , குரூப் சி ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
ஆனால், பின்னர் அந்த ரயிலானது மீண்டும் 1 -வது நடைமேடைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் மீண்டும் ரயில்வே பாலம் ஏறி இறங்கி 1 வது நடைமேடைக்கு வருவதற்கு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவம் தொடர்பாக ரயில் பயணிகள் சங்கத்தினர் வீடியோ பதிவிட்டு திருச்சி கோட்ட மேலாளருக்கு புகார் அளித்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று பணியில் இருந்த மயிலாடுதுறை ரயில் சிக்னல் கட்டுப்பாட்டு அறை மேலாளர் சுபம்குமாரை பணியிடை நீக்கம் செய்து ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுபோன்ற அதிகாரிகளின் கவன குறைவு காரணமாகவே சமீபகாலமாக ரயில் விபத்துக்கு அதிகம் நடப்பதாகவும். இதுபோன்ற தவறுகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.
IT Raid: அமைச்சர் எ.வ.வேலு வீட்டில் 4 வது நாளாக தொடரும் வருமான வரி சோதனை