மேலும் அறிய

மாயூரநாதர் கோயில் திருத்தேரோட்டம் - வடம்பிடித்து இழுத்த திருவாவடுதுறை ஆதீனம்

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தின் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டத்தில் திருவாவடுதுறை ஆதீனம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். கங்கை முதலான புன்னிய நதிகள் அனைத்தும் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி மாதம் முழுவதும் புனித நீராடி தங்கள் பாவ சுமைகளை போக்கிகொண்டதாக புராண வரலாறு கூறுகிறது. இதனால் காவிரி துலாக்கட்டத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை மாயூரநாதர், வதான்யேஸ்வரர் ஆலயங்களில் இருந்து சுவாமி புறப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு துலா உற்சவத்நை முன்னிட்டு கடந்த ஐப்பசி 1-ம் தேதி முதல் தீர்த்தவாரி நடைபெற்று வருகிறது.

Sabarimala Temple: பக்தர்களே கவனிங்க! சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை...நாளை நடை திறப்பு!

மாயூரநாதர் கோயில் திருத்தேரோட்டம்  - வடம்பிடித்து இழுத்த திருவாவடுதுறை ஆதீனம்

மேலும், பத்துநாள் உற்சவமாக மயிலாடுதுறையில் உள்ள சிவாலயங்களில் இருந்து பஞ்ச மூர்த்திகள் காவிரிகரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சிவாலயங்களில் 10 நாள் உற்சவம் திருக்கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. இந்நிலையில் 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும், சமயக்குரவர்களால் பாடல்பெற்றதுமான மாயூரநாதர் ஆலயத்தில் இறைவனை பிரிந்த அம்பாள் அபயாம்பிகை மயிலாடுதுறையில் மயில் உருவில் இறைவனை பூஜித்து மீண்டும் அவருடன் இணைந்ததாக புராண வரலாறு கூறுகின்றது. இதனால் மயிலாடுதுறை என்று ஊர் பெயர் பெற்றது.  அந்த வகையில் இந்த ஆண்டு துலா உற்சவம் மாயூரநாதர் கடந்த 7 -ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடைபெற்று வருகிறது. 

BHEL Recruitment: பெல் நிறுவனத்தில் வேலை; மாதம் ரூ.1.20 லட்சம் ஊதியம்; விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?

மாயூரநாதர் கோயில் திருத்தேரோட்டம்  - வடம்பிடித்து இழுத்த திருவாவடுதுறை ஆதீனம்

மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவத்தின் முக்கிய நிகழ்வாக திருத்தேர் ஓட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். சுவாமி, அம்பாள் பெரிய தேரிலும், புதிதாக செய்யப்பட்ட இரண்டு சிறிய தேர்களில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான், விநாயகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் திருத்தேரை வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Jammu Kashmir Bus Accident: ஜம்மு & காஷ்மீரில் கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 36 பேர் பலியான சோகம் - பிரதமர் மோடி இரங்கல்

மாயூரநாதர் கோயில் திருத்தேரோட்டம்  - வடம்பிடித்து இழுத்த திருவாவடுதுறை ஆதீனம்

தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா நாளை வியாழக்கிழமை  நடைபெறுகிறது. 16-ம் தேதி புகழ்வாய்ந்த கடைமுக தீர்த்தவாரியும், கார்த்திகை 1-ம் தேதி முடவனுக்கு இறைவன் காட்சி தந்த முடவன் முழுக்கு திருவிழாவும் நடைபெற உள்ளது. மேலும் கடைமுக தீர்த்தவாரியை முன்னிட்டு நாளை 16 -ம் தேதி மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

800 OTT Release: முத்தையா முரளிதரனின் ‘பயோபிக்’ .. 800 படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதுதான்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Modi on Delhi Election: எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு.. மீண்டும் கூட்டணிக்கு அழைப்பு! ஆட்டம் காட்டும் விஜய்கறார் காட்டும் EPS! விஜய் போடும் கணக்கு! RB உதயகுமார் சொன்ன மெசேஜ்VCK TVK Alliance : OPERATION திருமா! விஜய்யின் முதல் ORDER..ஆட்டத்தை தொடங்கிய ஆதவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK 2nd Year: 2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
2ம் ஆண்டில் தவெக.. தலைவர்கள் சிலை திறப்பு.. சுடச்சுட உணவு.. களைகட்டிய பனையூர்...
U19 Womens WC Final 2025: U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
U19 மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன்
Modi on Delhi Election: எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
எழுதி வச்சுக்கோங்க... பிப்.8-ல் டெல்லியில் பாஜக ஆட்சி அமையும்.. ஃபுல் கான்பிடன்ஸில் மோடி...
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Gujarat Road Accident: கும்பமேளாவால் தொடரும் உயிரிழப்புகள்..! 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து, 7 பக்தர்கள் பலி
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Erode East Bypoll 2025: யார் அந்த உதிரிகள்? விஜய்? சீமான்? ஈரோட்டிற்கு எவ்வளவு செஞ்சிருக்கோம் தெரியுமா? - ஸ்டாலின்
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
Income Tax Slabs New Tax Regime: வருமான வரி விதிகளால் தலை சுத்துதா? ரூ.12.75 லட்சம் வரி விலக்கு என்றால் என்ன? எப்படி கணக்கிடலாம்?
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன  மனைவி
WB Crime: பெண் குழந்தைக்காக கிட்னியை விற்ற கணவன் ..! ரூ.10 லட்சம், காதலனுடன் ஓடிப்போன மனைவி
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
SwaRail SuperApp: இனி ரயில்வேயின் மொத்த சேவையும் ஒரே ”செயலி”-யில் - ஸ்வரெயில் ஆப்பில் இவ்வளவு அம்சங்களா?
Embed widget