Mayiladuthurai: பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலயம் 40 ஆண்டு தீமிதி திருவிழா
பிரசித்தி பெற்ற மாப்படுகை சுமங்கலி காளியம்மன் ஆலயம் 40 ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கங்களை எழுப்பி தீ மிதித்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை மாப்படுகை ரயிவேகேட் அருகில் அமைந்துள்ளது, பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த சுமங்கலி காளியம்மன் கோயில். இந்த கோயில் உள்ள சுமங்கலி காளியம்மன் இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாகவும், மேலும் பக்தர்கள் வேண்டிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி தரும் தெய்வமாகவும், விளங்கி வருகிறார். இக்கோயிலின் 40 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தீமிதி திருவிழாவிற்காக இக்கோயிலில் கடந்த மாதம் 24 -ஆம் தேதி கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் காப்பு கட்டி விரதமிருந்த பத்தர்கள் காவிரி கரையிலிருந்து சக்திகரகம், அலகு காவடி, பால்குடம் சுமந்து மேள வாத்தியங்கள் முழங்க, காளி ஆட்டத்துடன் ஊர்வலமாக கோயிலை வந்து அடைந்தனர். அங்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் சக்தி கரகம் இறங்கியதை தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் வரிசையாக தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Vijay Trisha Pic: லியோ ஸ்பாட்டில் விஜய்யுடன் கூல் போஸ்... த்ரிஷாவின் பர்த்டே க்ளிக்!
இந்த தீமிதி திருவிழாவில் உயரம் குறைவான இரண்டு அடி உயர மனிதர் ஒருவர் தீக்குழியில் இறங்கி தீ மிதித்தது சக பக்தர்களிடையே பக்தி பரவசத்தை தூண்டியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி பராசக்தி என்று முழக்கங்களை எழுப்பியது தீ மிதித்தவர்களுக்கு மேலும் பக்தியை தூண்டியது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் கண்களை கவரும் வகையில் விண்ணை பிளக்கும் அளவிற்கு வானவேடிக்கை நிகழ்ச்சியில் நடைபெற்றது.
ECR Accident:சென்னையில் கோர விபத்து: அரசு பேருந்து மீது மோதிய ஆட்டோ: 6 பேர் உயிரிழப்பு
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்