Vijay Trisha Pic: லியோ ஸ்பாட்டில் விஜய்யுடன் கூல் போஸ்... த்ரிஷாவின் பர்த்டே க்ளிக்!
லியோ படப்பிடிப்பு தளத்தில் பேக்கரி ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.
லியோ படப்பிடிப்பு தளத்தில் விஜய் - த்ரிஷா இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டின் க்யூட் குயினாக வலம் வரும் நடிகை த்ரிஷா, இன்று தன் பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் விஜய்யுடன் லியோ படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷா பங்கேற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது.
சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் தற்போது லியோ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், லியோ படப்பிடிப்பு தளத்தில் பேக்கரி ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி கவனமீர்த்து வருகிறது.
To the ever-gorgeous actress who nails every role with utmost perfection 🤩
— TheRoute (@TheRoute) May 4, 2023
Happy Birthday @trishtrashers mam ❤️
May this year be filled with BLOODY SWEET happiness & blockbusters!#Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss @7screenstudio #LEO#HappyBirthdayTrisha pic.twitter.com/IsyeEeSl9j
நடிகர் விஜய்யுடன் ஐந்தாவது முறையாக த்ரிஷா இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், முன்னதாக கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி ஆகிய படங்களில் த்ரிஷா ஜோடி சேர்ந்துள்ளார்.
முன்னதாக விஜய் - த்ரிஷாவின் டூயட் பாடலொன்று பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பிரசாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முன்னதாக வேகமாக நடைபெற்று முடிந்தது.
முன்னதாக த்ரிஷா பொன்னியின் செல்வன் 2 படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, பல இடங்களிலும் ரசிகர்கள் லியோ அப்டேட் கேட்டு த்ரிஷாவை பேசவிடாமல் செய்து வந்தனர்.
த்ரிஷாவும் மற்றொரு சந்தர்ப்பத்தில் இதுகுறித்து பேசலாம் எனக்கூறி ரசிகர்களை அமைதிப்படுத்தி வந்தார்.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ப்ரொமோஷன் பணிகள் நிறைவடைந்து மீண்டும் லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.
நடிகர்கள் சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
செவன் ஸ்க்ரீன் நிறுவனத்தின் பேனரின் கீழ் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு ஸ்டண்ட் கொரியோகிராஃபராகப் பணிபுரிகிறார். தினேஷ் மாஸ்டர் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.
மேலும் படிக்க: HBD Meghana Raj : மகனே எனது பலம்... பலருக்கும் உதாரணமாக இருக்கும் போல்டான சிங்கிள் மாம் மேக்னா ராஜ் பிறந்தநாள் இன்று!