மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது எனவும், தற்போது உள்ள இருப்பை கொண்டு விவசாயிகளுக்கு உரம் வழங்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடுமையான உரத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்தாண்டு போதிய நேரத்தில் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு கடைமடை பகுதிகளுக்கு வந்ததை அடுத்து முன்பு எப்போதும் இல்லாத அளவாக அதிகளவு குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது, ஆனால் விவசாயிகள் எப்போதும் ஏதேனும் ஒரு வகையில் விவசாயம் சார்ந்த பிரச்சனைக்கு ஆளாகி வருவதாகவும், அந்த வகையில் தற்போது உர தட்டுப்பாட்டுக்கு ஆளாகியுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தலைமையில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கூட்டத்தில் விவசாயிகள் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து, மயிலாடுதுறையில் உள்ள தனியார் உரம், விதை, பூச்சி மருந்து கடைகளில் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

உரம் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் அதனைத் தொடர்ந்து செய்தியார்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் உரக்கிடங்கு மற்றும் தனியார் நிறுவனங்கள் பூச்சிமருந்து விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு செய்ய மாவட்டத்தில் 5 வட்டாரங்களிலும் 5 தனிப்படை அமைக்கப்பட்டு, கடைகள் மற்றும் குடோன்களில் இருப்புகள் கண்டறியப்பட்டு வருகின்றது. உரங்கள் விற்பனை செய்யும்போது அதை கட்டாயமாக கடை உரிமையாளர்கள் பதிவு செய்கின்றனரா என்று ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Crime: பதறவைத்த சம்பவம்.. 16 வயது சிறுமி கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த கிராமம்..

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

இதன் மூலமாக மத்திய அரசிற்கு உரங்கள் விற்பனை மற்றும் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது தெரியவரும். மயிலாடுதுறை மாவட்டத்தில் 118 தனியார் உரக்கடைகளும், 64 உரக்கிடங்குகளும் உள்ளன. எல்லா இடங்களிலும் ஒரு வார காலத்திற்குள் ஆய்வு செய்து இருப்புகள் கண்டறியப்படும்” என்றார். மேலும், உரங்கள் விலை குறித்து கடைகளில் முகப்பில் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் எனவும் வேளாண்மை துறை அலுவலங்களில் உரம் வாங்க வரும் விவசாயிகளிடம் கட்டாயப்படுத்தி மற்ற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

HBD Soori: சூரி வாழ்வில் புரோட்டா செய்த மாயம்... ஒரு வாளியை தட்டியதால் கொட்டோ கொட்டுனு கொட்டும் படங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உரத்தட்டுப்பாடு - மாவட்ட ஆட்சியர் தகவல்

மயிலாடுதுறை மாவட்டத்தை பொருத்தவரை உரத்தட்டுப்பாடு என்பது உள்ளது. தற்போதைய இருப்பை வைத்து விவசாயிகளுக்கு உரங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவைப்பருத்தில் 118 நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படும். தற்போது குறுவை அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால் இதுவரை 47 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. செப்டம்பர் முதல் வாரத்திற்குள் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களும் திறக்கப்படும் என்று ஆட்சியர் தெரிவித்தார். மேலும் நெல் மூட்டைகள் மழையில் நனையாதவாறு கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் உடனுக்குடன் சீர்காழி தாலுக்கா எடமணலில் உள்ள சேமிப்பு கிடங்குக்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவித்தார். ஆய்வின்போது, வேளாண்துறை இணை இயக்குநர் சேகர் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”தெலுங்குல பேச முடியாது.. தமிழ்ல தான் பேசுவேன்”அல்லு அர்ஜுன் THUGLIFEபள்ளியில் சாதியா? PAINT-ஐ எடுத்த அன்பில்! அரசுப் பள்ளியில் அதிரடி”அரசியலில் உன் மகன் காலி!” பழி தீர்த்த DK சிவக்குமார்! கதறும் அமைச்சர் குமாரசாமி!அடிதடியில் இறங்கிய அதிமுகவினர்! செல்லூர் ராஜூ vs டாக்டர் சரவணன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
Dhanush Nayanthara: 'ராக்காயி' நயன்தாராவுக்கு எதிராக 'ராயன்' தனுஷ் வழக்கு! நீதிமன்றம் உத்தரவு என்ன?
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
பள்ளிகளில் 234/77 ஆய்வு: உதயநிதி தொகுதியில் தொடங்கி முதல்வர் தொகுதியில் நிறைவுசெய்த அமைச்சர் அன்பில்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
Adani Green Energy Refutes: லஞ்ச விவகாரம்..! எல்லாமே பொய் கிடையாது, ஆனா? அதானி நிறுவனம் புட்டு புட்டு வைத்த பதில்கள்
"தத்துவம் இல்லாத தலைவர்" சீமானா? விஜய்யா? அடித்துக் கொள்ளும் அண்ணன்களும், தம்பிகளும்!
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
Exclusive : ”இன்னொரு கதை பண்ணுங்க சார்” ரஜினி சொன்ன அந்த இயக்குநர் யார் தெரியுமா..?
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
ADMK Generalbody Meeting: அதிமுகவில் அடி, தடியால் சர்ச்சை - அவசரமாக பொதுக்குழுவை கூட்டும் எடப்பாடி பழனிசாமி
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Fengal Cyclone LIVE: சீறும் கடல்! மெரினா கடற்கரையில் ஒதுங்கிய எச்சரிக்கை மிதவை
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Chembarambakkam Lake: வருகிறது புயல்.. செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம் என்ன ?
Embed widget