மேலும் அறிய

தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?

400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் கம்பீரமாக உள்ள தஞ்சை ராஜகோபால பீரங்கி.

தஞ்சைக்கு சுற்றுலா வருகிறீர்களா? அப்போ நீங்கள் பார்க்க வேண்டிய மிக முக்கியமான இடம் ஒன்று உள்ளது. அதுதான் பீரங்கி மேடு. அங்க அப்படி என்னதான் இருக்கு என்கிறீர்களா? இன்று உலகில் உள்ள, பழைய பீரங்கிகளில் ஐந்தாம் இடம் பிடித்துள்ள பீரங்கி உள்ள இடம்தான் இது.

தஞ்சை நாயக்கர்கள் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை கி.பி. 1532-இல் ஆட்சி தொடங்கினர். இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 – 1645) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த தஞ்சாவூர் நாயக்கவம்சத்தின் மூன்றாவது மன்னர். தஞ்சையை ஆண்ட நாயக்கர்களில் தனிச்சிறப்புடையவராக விளங்கியவர்தான் இந்த இரகுநாத நாயக்கர்.

இவர் தம்முடைய தந்தையின் மறைவிற்குப் பின்பு கி.பி.1617இல் முறைப்படி தஞ்சை நாயக்கர் ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக்கொண்டார். இன்றைய தஞ்சையில் உள்ள மானோஜிப்பட்டி பகுதி அன்றைய கொல்லர்களின் இருப்பிடம் மற்றும் பணியிடம் என்பதையும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும். எவ்வித வசதிகளும் இல்லாத காலத்தில் தஞ்சைக் கொல்லர்களின் தொழிற் திறமையால் இரகுநாத நாயக்கரின் ஆணைக்கிணங்க உருவானது இராஜகோபால பீரங்கி என்று அழைக்கப்படும் இந்த பழமையான பீரங்கி. இதற்கு ஏன் இந்த பெயர் வந்தது.


தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?

தான் வணங்கும் தெய்வமான, மன்னார்குடி, இராஜகோபால சுவாமியின் பெயரையே இந்தப் பெரும் பீரங்கிக்கு பெயராக வைத்தார் இரகுநாத நாயக்கர் என்பதையும் தெரிந்து கொள்வோம். தஞ்சாவூர் பெரிய கோட்டையின் உட்புறம் கிழக்கு வாசலையொட்டி வெள்ளை பிள்ளையார் கோவில் அருகில் ஒரு பெரிய மேடை (சுமார் 60 அடி உயரத்திற்கு குன்று) போல் அமைக்கப்பெற்று அதன்மேல் இந்த பெரிய பீரங்கியானது வைக்கப்பட்டுள்ளது. கட்டப்பட்ட நாள் முதல் இன்று வரை கம்பீரமாக இந்த பீரங்கி மேடை உள்ளது. காலப்போக்கில் இது பீரங்கி மேடு என்றே அழைக்கலாயிற்று.

பொதுவாகப் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் தஞ்சை பீரங்கியோ தேனிரும்புப் பட்டைகளால் இணைப்பு முறையில் உருவாக்கப் பெற்றுள்ளது என்பதை தெரிந்து கொள்வோம். 26 அடி நீளம் 300 எம்எம் உருட்டுருளையும் 150 எம்எம் உட்சுவர் கனமும் கொண்டது. தேனிரும்பால் செய்யப் பெற்ற இந்த பீரங்கியின் எடை 27 டன். இந்தியாவிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளில் இதுவும் ஒன்றாகும்.

தஞ்சை நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த பீரங்கி செய்யும் தொழில்நுட்பமானது அந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் பயன்படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பமாக கருதப்படுகிறது.

மற்ற மாநிலங்கள் மற்றும் மற்ற நாடுகளில் இருக்கும் பீரங்கிகள் வண்ணம் பூசப்பட்டு பாதுகாப்பான முறையில் பூட்டப்பட்டிருக்கும். ஆனால் தஞ்சாவூரில் உள்ள இந்த பீரங்கி 400 ஆண்டுகளாக வெட்டவெளியில் கொட்டும் மழை, கொளுத்தும் வெயிலில் இருந்தும் எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் கன கம்பீரமாக கட்டுக்குலையாமல் உள்ளது.

 


தஞ்சாவூர் : கொட்டும் மழை, கொளுத்தும் வெயில்.. கம்பீரமாக நிற்கும் தஞ்சை ராஜகோபால பீரங்கி.. வரலாறு என்ன?
 
2004-ஆம் ஆண்டு கான்பூர் ஐஐடி-யை சேர்ந்தவர்கள் தஞ்சாவூரில் இருக்கும் இந்த ராஜகோபால பீரங்கியை ஆய்வு மேற்கொள்ளும் போது இந்த பீரங்கியை பற்றி கணிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளனர். அதற்கு முன்னதாகவே ரோஸ்லர் எனும் ஆய்வாளர் அல்ட்ராசோனிக் எனப்படும் மீயொலி அலைகளை வைத்து இந்த பீரங்கியின் வடிவமைப்பை மிக தெளிவாக குறிப்பிட்டிருந்தார். பிறகு இந்த குறிப்பை எடுத்துக்கொண்டு ஐஐடி சேர்ந்தவர்கள் இந்த பீரங்கியின் அடிப்படை அமைப்புகளை தெரிந்துள்ளார்கள்.

இந்த பீரங்கியை உருவாக்க இரண்டு முக்கியமான தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு தொழில்நுட்பம் மற்றும் வரலாறு கொண்ட இந்த பீரங்கிமேடானது முழுக்க முழுக்க தமிழர்களின் தொழில்நுட்பங்களாலும் சிந்தனைகளாலும் உருவாக்கப்பட்டது. தஞ்சைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் இதை ஒருமுறை பார்த்து நம் முன்னோர்களின் தொழில் திறமையை கண்டு மகிழ வேண்டும்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!
செவிலியர்கள் கையெழுத்து இயக்கம்: தஞ்சையில் அரசு நடவடிக்கைக்கு எதிர்ப்பு!

வீடியோ

Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்
கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரி*ப்பு! 32 பேருக்கு அரசு வேலை கரூர் செல்லும் விஜய்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Rajmohan: “கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
“கல்விக்கூடங்கள் அரசியலின் மேடை அல்ல.. இனி பள்ளிகளில்..“ அமைச்சர் ராஜ்மோகனின் அதிரடி அறிவிப்பு
UDHAYANIDHI VS VIJAY :
"MLA-க்களை வாங்குறதுல காட்டுற கவனத்தை, தண்ணீர் வாங்குறதுல காட்டுங்க" - உதயநிதி ஸ்டாலின்
EPS Vs CM Vijay: அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அமைச்சரவையில் இருந்து காங்கிரஸை விடுவிக்கத் தயாரா.? முதலமைச்சர் விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
இடைநிற்றலே இல்லாத தமிழ்நாடு; பள்ளிக் கல்வியில்அசைக்க முடியாத சாதனை- UDISE+ அறிக்கை!
US Iran War: ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
ஈரானை சாத்தியெடுக்கும் அமெரிக்கா.! 14 பேர் பலி; பஹ்ரைன் எங்கும் எச்சரிக்கை ஒலி; வளைகுடாவில் பதற்றம்
Automatic Cars Under 6 Lakh: வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
வெறும் ரூ.6 லட்சம் பட்ஜெட்ல ஒரு ஆட்டோமேட்டிக் கார் வாங்கணுமா.? அப்போ இதுதான் உங்களுக்கான லிஸ்ட்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
நெல்லை மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.15,037 கோடி முதலீடு.. 2670 பேருக்கு வேலை- அசத்திய சிஎம் விஜய்
Nissan Tekton First Look: டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
டஸ்ட்டருக்கு டஃப் கொடுக்குமா டெக்டான்.? எஞ்சின், மைலேஜ், பாதுகாப்பு எப்படி.? முதல் பார்வை இதோ.!
Embed widget