கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் யானைப் பாகன்.

கடந்த ஆண்டு, நியூயார்க்கில் உள்ள பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக ஊடகங்கள் தெரிவித்தது. பிராங்க்ஸ் விலங்குகள் பூங்காவில் ஒரு புலிக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு மேலும், அங்கே 4 புலிகள் மற்றும் 3 சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அது மட்டுமில்லாமல், அங்கே மேலும் 6 புலிகளுக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பராமரிப்பாளரிடமிருந்து விலங்குகளுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார்கள். பாதிக்கப்பட்ட விலங்குகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுவதாகவும், நல்ல பசியும், குறைவாக இருமலும் இருப்பதாக  பூங்கா நிர்வாகம் தெரிவித்திருந்தது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

அதேபோல், இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதி வேகமாக பரவி வருகிறது. மனிதர்களிடையே மட்டுமே பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது விலங்குகளுக்கும் பரவும் என்கிற தகவல், இந்தியாவின் பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்த சிங்கங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு மூலம் உறுதி செய்யப்பட்டது. ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் (NZP) எட்டு ஆசிய சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

இந்த சிங்கங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகளில் பாசிட்டிவ் வந்தது என்று ஏப்ரல் 29-ம் தேதி தகவல் வெளியானது. இருப்பினும், NZP இன் கண்காணிப்பாளரும் இயக்குநருமான டாக்டர் சித்தானந்த் குக்ரெட்டி இந்த தகவலுக்கு மறுப்பு தெரிவிக்கவும் இல்லை, அதேசமயம் சிங்கங்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதியாக அறிவிக்கவும் இல்லை.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

இதன் மூலம் விலங்குகளையும் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலில் கொரோனா பரவலைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த குடிநீரை மாயூரநாதர் கோயில் யானை அபயாம்பாளுக்கு வழங்கினார் கோயில் பாகன் வினோத். மேலும், யானைக்கு மூலிகை சாம்பிராணி புகை போட்டு யானைக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாகன்.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

கொரோனா வைரஸ் தொற்று, விலங்குகளுக்கும் பரவுமா? தொற்றிலிருந்து விலங்குகள் மீண்டு வர சரியான வழிமுறைகள் என்ன என்பது குறித்து கால்நடை மருத்துவர்கள் , ஆராய்ச்சியாளர்கள், அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வழங்காத பட்சத்தில் மயிலாடுதுறையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

கொரோனா அச்சம்: கபசுர குடிநீர் அருந்தும் கோயில் யானை!

சில விலங்குகள் மக்களிடமிருந்து வைரஸ் தொற்று பெறலாம் என்றும், அந்த விலங்குகள் அதை மனிதர்களுக்கு கடத்துவதற்கான அறிகுறி இல்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். வழிகாட்டு முறைகள் இல்லை என்றாலும், பாகன்கள் விருப்பப்பட்டு, தங்களின் வளர்ப்பான யானைகளை பாதுகாக்க கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு துவங்கியிருக்கிறது. இது இன்னும் பிற கோவில்களிலும் தொடர வாய்ப்பு இருக்கிறது.

Tags: COVID TN Corona temple elephant elephant corona kapasarakudineer

தொடர்புடைய செய்திகள்

குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி

குற்றங்கள் குறைய நடவடிக்கை எடுக்கப்படும்; புதிய எஸ்.பி., பேட்டி

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

பச்சிளம் குழந்தை விரல் துண்டான விவகாரம்: விசாரணைக்கு உத்தரவு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை பாழாக்கும் சோப்பு தொழிற்சாலைகள்

ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் ஏரி : கமலா ஹாரிஸ் பொறுப்பேற்ற ஆண்டைக் கொண்டாடும் பூர்வீக கிராமம்!

ரூ.1 கோடி மதிப்பில் தூர்வாரப்படும் ஏரி : கமலா ஹாரிஸ் பொறுப்பேற்ற ஆண்டைக் கொண்டாடும் பூர்வீக கிராமம்!

14 நாள் குழந்தை: பேண்டேஜ் கழற்ற வந்த நர்ஸ்; கை விரலை துண்டித்த பரிதாபம்!

14 நாள் குழந்தை:  பேண்டேஜ் கழற்ற வந்த நர்ஸ்; கை விரலை துண்டித்த பரிதாபம்!

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை - ப.சிதம்பரம்

Tamil Nadu Coronavirus LIVE News :  தமிழ்நாட்டில் 34 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லை - ப.சிதம்பரம்

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

‛உன் உருவமும்... உன் கலரும்...’ குக் வித் கோமாளி தீபா சங்கர் சந்தித்த சங்கடங்கள்!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

தமிழ்நாடு குடிமகன்கள் கூல்... புதுச்சேரியில் மது டோர்டெலிவரிக்கு அனுமதி!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!

90's கிட்ஸ்களின் கனவில் குடியேறிய ஈரமான ரோஜா.. மோகினி பிறந்த நாள் இன்று!