மேலும் அறிய
Advertisement
புகழ்பெற்ற மாங்கனித் திருவிழாவில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி : ஆட்சியர் அறிவிப்பு..
காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தில் மிக பிரசித்தி பெற்ற விழாவாக நடைபெறுவது மாங்கனி திருவிழா. இந்த திருவிழாவிற்கு காரைக்கால் மட்டுமின்றி புதுச்சேரி அதேபோல் அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் இருந்து நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாங்கனி திருவிழாவிற்கு ஆண்டுதோறும் வருகை தருவர். இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா தாக்கத்தின் காரணமாக, மாங்கனித் திருவிழா கோவில் வளாகத்தின் உள்ளே நடைபெற்றது. ஆகையால் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் இந்த ஆண்டு காரைக்கால் மாங்கனி திருவிழா மாப்பிள்ளை அழைப்புடன் நேற்று தொடங்கியது. வருகிற 25ஆம் தேதி வரை தினமும் பல நிகழ்ச்சிகளுடன் நடைபெற உள்ள இந்த திருவிழா, கோவிலுக்குள் நடைபெறும் எனவும், பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், முன்னதாக காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவிழா நடைபெறும்போது கோயிலுக்குள் பகுதி பகுதியாக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தற்போது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா கூறியதாவது, காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நாட்களில் பொது முடக்க கட்டுப்பாடு விதிகளின்படி பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக பரமதத்தர் அம்மையார் திருக்கல்யாண நாளான இன்று பகல் 12 மணி முதல் 5 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். அது போல வரும் 24ஆம் தேதி பிச்சாண்டவர் அமுதுபடையலின் போது பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் செய்யலாம். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் 50 முதல் 100 பேர் வரை பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவார்கள். கோயிலுக்குள் வருவோர் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும், தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும், அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்யப்படும், அனைவருக்கும் கிருமிநாசினி வழங்கப்படும். பக்தர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.
அரசு அனுமதித்திருக்கும் இந்த வசதியை பக்தர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும், கொரோனா பரவலுக்கு இது காரணமாகி விடாத வகையில் பக்தர்களின் செயல்பாடுகள் இருக்க வேண்டும், என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்த அறிவிப்பால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் 500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது அனைத்து இடங்களிலும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது எனவும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion