மேலும் அறிய
Advertisement
திருவாரூரில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை...!
’’நன்னிலத்தில் அதிகபட்சமாக 123 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது’’
நவம்பர் 2ஆம் தேதி தஞ்சை திருவாரூர் நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது மேலும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் கடந்த இருபத்தி ஆறாம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தற்பொழுது வரை இடைவிடாமல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நேற்று இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது வரை கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அதிக பட்சமாக 123 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து கடந்த சில தினங்களாக விட்டு விட்டு பெய்து வந்த மழை திருவாரூர் மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. நேற்று பகல் நேரத்தில் சிறிதளவு மழை விட்டிருந்த நிலையில் மீண்டும் நேற்று நள்ளிரவு முதல் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். மேலும் தரைக்கடை வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் மழையின் காரணமாக மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூரில் 28.5 மில்லி மீட்டரும், நன்னிலத்தில் 123.4 மில்லி மீட்டரும், திருத்துறைப்பூண்டியில் 86.8 மில்லி மீட்டரும், குடவாசலில் 43.6 மில்லி மீட்டரும், நீடாமங்கலத்தில் 70.2 மில்லி மீட்டரும், மன்னார்குடியில் 33.0 மில்லி மீட்டரும், முத்துப்பேட்டையில் 58.0 மில்லி மீட்டரும் வலங்கைமானில் 50.8 மில்லி மீட்டரும் மழையளவு பதிவாகியுள்ளது.
நேற்று முதல் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக நேற்று பள்ளிகள் திறக்கப்பட வில்லை இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளது திருவாரூர் மாவட்டம் மணக்கால் அய்யம்பேட்டை யில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் தொடர் கனமழையின் காரணமாக பாலையூர் மாவூர் உள்ளிட்ட கிராமங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்து உள்ளன இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் இதேபோன்று தற்போது சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
30 முதல் 40 நாட்கள் ஆன சம்பா பயிர்களுக்கு தொடர்ந்து மழை பெய்து வருவதால் சம்பா பயிர்கள் மழை நீரில் பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து திருவாரூர் மாவட்டத்திலுள்ள வடிகால் வாய்க்கால்களை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் தூர் வாரவேண்டும், தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதேபோன்று கிராமப்புறங்களில் வீடுகளை சுற்றி அதிக அளவு மழைநீர் தேங்கி இருக்கிறது குறிப்பாக திருவாரூர் அருகே மூங்கில்குடி உள்ளிட்ட கிராமங்களில் வீடுகளை சுற்றி மழை நீர் தேங்கி இருக்கிறது இந்த மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேபோன்று திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில் மழை நீரும் கழிவு நீரும் கலந்து செல்வதால் பொதுமக்கள் அச்சத்துடன் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திருவாரூர் கீழ்பாலத்தில் மழைநீர் முழுமையாக தேங்கி இருப்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு திருவாரூர் நாகை தேசிய நெடுஞ்சாலை வழியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கீழ் பாலத்தில் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி நிர்வாகத்தினர் உடனடியாக வடிய வைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion