கோயில்களை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு - மடங்களின் பிரதிநிதிகளை சேர்க்க கோரிக்கை
கோவில்களை மேம்படுத்த தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை ஆலோசனைக் குழுவில் ஆகம வல்லுநர்களையும், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் பிரதிநிதிகளையும் சேர்க்கவேண்டும் என அர்ச்சகர்கள் சங்கம் கோரிக்கை
கோவில்களை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை ஆலோசனைக் குழுவில் ஆகம வல்லுநர்களையும், ஆதீனங்கள் மற்றும் மடங்களின் பிரதிநிதிகளையும் சேர்க்கவேண்டும் என தமிழக முதல்வருக்கு, முதலமைச்சருக்கும் தமிழ்நாடு அர்ச்சர்கர்கள் சமூக நலச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. கோவில்களை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலை ஆலோசனைக்குழு உள் நோக்கத்தோடு அமைக்கப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. தமிழ்நாட்டில் பல்லாயிரக் கணக்கான ஆலயங்கள் ஆகம விதிமுறைப்படி அமைக்கப்பட்டு காமிகம் முதலான சைவ ஆகமப்படியும, வைகானஸ மற்றும் பாஞ்சராத்ர அகமங்கள்படியும் தொன்று தொட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மேலே சொன்ன ஆகம வல்லுநர்கள் யாருமே இக்குழுவில் இடம்பெறாதது வேதனையையும், கவலையையும் ஏற்படுத்துகிறது. மேலும் மிகவும் புராதனமான ஆதீனங்களான தருமபுரம், திருவாவடுதுறை. கூனம்பட்டி ஆதீனங்கள், மற்றும் திருப்பனந்தாள் காசித்திருமடம், காஞ்சி சங்கர மடம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இந்த குழுவின் செயல்பாடுகால்; ஆலய பூஜை சம்பந்தமான உச்ச நீதி மன்ற, உயர் நீதி மன்ற வழிகாட்டுதல்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படும். ஆகவே தமிழக அரசு உடனடியாக மேலே சொன்ன ஆகமங்களில் தோ்ச்சி பெற்றவர்களையும், முன் சொன்ன ஆதீனங்கள் மற்றும் திருமடங்களின் பிரதிநிதிகளையும் இக்குழுவில் சோத்துக்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என தமிழ்நாடு அர்ச்சகாகள் சமூக நலச்சங்கத்தின் தலைவர் வழக்கறிஞர் எஸ். அருணாசலம், பொதுச் செயலாளர் புவவர் இரா. பாலசடாட்சரம் ஆகியோர் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பாலசடாட்சரம் கூறுகையில்,கோவில்களில் ஆகமத்தை அடிப்படை கொண்டு தான் அனைத்து பணிகளும் செய்ய வேண்டும். ஆகமத்தை மீறியும், அதற்கு தொடர்பில்லாதவர்களை நியமனம் செய்தால், கோவில்களின் விதிமுறைகள் மீறும் வாய்ப்புள்ளது. தற்போது நியமிக்கப்பட்டவர்கள் ஆகம முறைகளை கடைபிடிக்கப்பட்டார்கள். தலவரலாறு படித்தர்களுக்கு ஆகமத்தை பற்றி தெரியாது. ஆகம மரபுகளை பின்பற்றுபவர்கள் பெரும்பாலானோர் ஆலோசனை இல்லை தெரிகிறது. அதனால் ஆகமத்தை மரபு காக்கும், தர்மபுரம், திருவாவடுதுறை, கூனம்பட்டி ஆதீனங்கள், திருபனந்தாள் காசி திருமடம், காஞ்சிபுரம் சங்கர திருமடம் ஆகியோர்களின் கருத்துக்களை கேட்டு, அதன் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்.
பழனி பாடசாலை தலைவரும், தமிழ்நாடு அர்ச்சகர்கள் சமூக நலசங்க ஆகம வல்லுனர்கள் குழு தலைவருமான பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், பெங்களூர் பரிச்சாதிகாரி பெங்களூர் சபேச சிவாச்சாரியார், திருகண்ணமங்கை பாலாமணி சிவாச்சாரியார்கள் போன்றவர்களை குழுவில் இணைக்க வேண்டும்.ஆகம விதிமுறைகள் தெரிந்தவர்களை நியமனம் செய்யாவிட்டால், தமிழக முதல்வரை சந்தித்து கோரிக்கை விடுப்போம். தவறும் பட்சத்தில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றார்.